டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்!
செய்தி முன்னோட்டம்
'அமரர்' கல்கியின் சரித்திர புனைவான 'பொன்னியின் செல்வனை' படமாக எடுத்தவர் மணிரத்னம். முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியானதை அடுத்து, படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த மாத இறுதியில் வெளிவரவிருக்கிறது.
இரண்டாம் பாகத்தின் முதல் பாடல், இன்று மாலை வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் கதாநாயகனான கார்த்தி (வந்தியத்தேவன்) ட்விட்டரில், த்ரிஷாவிற்கு(குந்தவை) ஒரு ட்வீட் அனுப்பி உள்ளார்.
அது வைரல் ஆகி வருகிறது.
கதாபாத்திரத்தின் படி, வந்தியத்தேவன் ஒரு காதல் மன்னன். கிடைக்கும் கேப்பில் எல்லாம் அனைத்து பெண்களிடமும் கடலை போடும் ஆசாமி. அதிலும், அழகே உருவான சோழ இளவரசி என்றால் கேட்கவா வேண்டும்?!
வந்தியத்தேவனின் இந்த ட்விட்டர் பதிவிற்கு, ட்விட்டர் பயனர்கள் பல வேடிக்கையான பதில்களும் அளித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
ஹாய் இளையபிராட்டி!
என்ன பதிலே இல்லை😔 https://t.co/HW2gizbplw
— Karthi (@Karthi_Offl) March 20, 2023
ட்விட்டர் அஞ்சல்
தோழி குந்தவை
தோழிஸ் எப்பவும் மெதுவா தான் ரீப்ளே பண்ணுவாங்கனா
— Abinesh (@SuriyaAbi6) March 20, 2023
ட்விட்டர் அஞ்சல்
லேட்டா ரிப்ளை
Ithula late ha 🤸🤸enga thalaivan ha pathengala pic.twitter.com/dit09RCLhs
— ✨🦋 (@SakthiDinky) March 20, 2023
ட்விட்டர் அஞ்சல்
லியோ படப்பிடிப்பில் திரிஷா
Neenga inga okkandhu Hi bye nu msg anupinu irukinga Andha இளையபிராட்டி anga Kashmir la okkandhu Leo oda chocolate kindinu iruka pic.twitter.com/q9surs3lfx
— PrayushKhanna🤴 (@prayushkhanna12) March 20, 2023
PS2
லியோ படப்பிடிப்பில் திரிஷா
நடிகை திரிஷா தற்சமயம், லியோ படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் உள்ளார்.
மறுபுறம், கார்த்தியோ, 'ஜப்பான்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். விக்ரம், 'தங்கலான்' பட ஷூட்டிங்கில் உள்ளார்.
இவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன் வேலைகளுக்காக கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும், அதன் பின்னர் ப்ரோமோஷன் வேலைகள் துவங்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'அக நக' இன்று மாலை வெளியாகிறது. இந்த பாடலை ஷக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.
பாடலின் சிறு பகுதி, ஏற்கனவே PS1 -இல் கேட்டிருப்பீர்கள். இது வந்தியத்தேவனிற்கும், குந்தவைக்கும் இடேயேயான காதல் கட்சிகளின் பொழுது வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.