சோழர் வரலாற்றில் இப்படி ஒரு காதலா? நெட்டிசன்களை கொள்ளை கொள்ளும் PS 2 போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
பொன்னியின் செல்வன்-2ன், முதல் பாடலான 'அக நக' இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதற்காக ஒரு போஸ்ட்டரையும் வெளியிட்டு இருந்தனர் படக்குழுவினர்.
அதில், வந்தியத்தேவனின் கண்கள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருப்பது போலவும், அவர் எதிரில், அழகும், கம்பீரமும் ஒருசேர, சோழநாட்டின் குலவிளக்கு என்று அழைக்கப்படும், 'இளையபிராட்டியார்' குந்தவை தேவி நிற்பது போலவும் இருந்தது.
பொன்னியின் செல்வன் பேன்ஸ் அனைவருக்குமே இந்த படத்தின் கதை தெரிந்து இருக்கும். அதில், அனைவருமே ரசித்த பகுதி என ஒன்று இருந்தால், அது வந்தியத்தேவனுக்கும், குந்தவைக்கும் இடையே நடைபெறும் காதல் பரிமாற்றங்கள் தான்.
தான் காதலிக்கும் பெண்ணின் இலட்சியத்தையும், அவள், 'காலால் இட்ட பணியை, தலையால் செய்து முடிக்கும்' காதலன் எத்தனை பேருக்கு கிடைக்கும்?
ட்விட்டர் அஞ்சல்
முதல் பாடலான 'அக நக' இன்னும் இரு தினங்களில் வெளியாகும்
Looking Forward to hear 🎧💕#AgaNaga Song🎵 Release on 20th March. 6 PM. Stay tuned ❤
— Raja Luv Dsp (@rajadsp18) March 18, 2023
An @arrahman Musical🎶
🎤: @ShakthisreeG
✍🏻: @ilangokrishnan #Karthi #Trisha #PS2 #PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @madrastalkies_ @LycaProductions @tipsmusicsouth pic.twitter.com/TDF2UDjqbj