
துருவ நட்சத்திரம் மே மாதத்தில் வெளிவரும் என தகவல்
செய்தி முன்னோட்டம்
விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட படம் 'துருவநட்சத்திரம்'. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
படத்தின் நாயகர்களும், மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் அடுத்ததடுத்த படங்களில் பிஸியாகி விட்டன.
இதற்கிடையில், திரைப்படத்தின் மீதம் இருந்த படப்பிடிப்புகளும், பாடல் ரெகார்டிங்கும் வேகமாக நடைபெற்று வருவதாக சென்ற மாதம் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும், ஹிந்தி பட நடிகர் ஒருவர், நேற்று ட்விட்டரில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதன்படி, படத்தின் இறுதி காட்சி நேற்று எடுத்துமுடிக்க பட்டதாகவும், இத்துடன் படப்பிடிப்பு நிறைவுறுவதாகவும், மே மாதத்தில் படம் திரைக்கு வருமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
துருவநட்சத்திரம் படப்பிடிப்பு நிறைவுற்றது
Aaaand that’s another wrap!
— Bendi G बेंडी (@BenedictGarrett) March 15, 2023
Both for me and for the whole film - honoured to have been part of it it’s very last shot scene. After 6 long years of shooting #DhruvaNatchathiram will finally be releasing this May!#Kollywood #Tamil #gauthamvasudevmenon #ChiyaanVikram pic.twitter.com/pwqqnUv2lD