
விரைவில் வெளியாக போகிறது துருவநட்சத்திரம் என தயாரிப்பாளர்கள் அறிவிப்பு; விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்
செய்தி முன்னோட்டம்
2016 இல் தொடங்கப்பட்ட, விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனனின் படமான 'துருவநட்சத்திரம்' நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இருந்தது.
அதை பற்றி எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில், விக்ரம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.
படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவு பெறப்போகிறது என்றும், விரைவில் திரைக்கு வரப்போகிறது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தில்,'ஜான்' என்கிற அண்டர்கவர் ஸ்பை வேடத்தில் நடிக்கிறார் விக்ரம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கார்த்திக், சாஷா திரிபாதி குரலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான, இந்த படத்தின் சிங்கிள், ஹிட் ஆனது.
துருவநட்சத்திரத்தில், விக்ரமுடன், சிம்ரன், ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
துருவநட்சத்திரம் ரிலீஸ்
#John will meet you 🔜
— Sony Music South (@SonyMusicSouth) February 7, 2023
➡️ https://t.co/HlEpUowY89#ChiyaanVikram @menongautham @Jharrisjayaraj #KondaduvomEntertainment #DhruvaNatchathiram pic.twitter.com/k7M0boHvXG