
NTR 30: RRR பட நாயகனான Jr .NTR உடன் இணையும் அனிருத்
செய்தி முன்னோட்டம்
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு, Jr.NTR நடிக்கும் அடுத்த படம், NTR-30 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கு படவுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், ஹிந்தி படவுலகில் இளம் நடிகையுமான ஜான்வி கபூர் அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்திற்கு இசை அமைப்பது, 'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர். அவரும் இந்த பூஜையில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அனிருத், கொரட்டலா சிவாவின் பார்வை மிகவும் பெரியது. அதில் தானும் ஒரு சிறு பங்கேற்ற இருப்பது, தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும், இது போன்ற ஜாம்பவான்களுடன் பணிபுரிய தனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கியதற்கு இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
NTR 30 படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
#Anirudh speech at #NTR30 pooja ceremony.. 💥♥️pic.twitter.com/HPyasXX5qI
— VCD (@VCDtweets) March 23, 2023