NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள்
    சிறுத்தை படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரக்ஷனா

    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2023
    11:38 am

    செய்தி முன்னோட்டம்

    'சிறுத்தை' படத்தில், கார்த்தியின் குழந்தையாக நடித்த குட்டி பாப்பாவை நினைவிருக்கிறதா? அந்த சுட்டி பாப்பாவின் பெயர் ரக்ஷனா.

    அப்போது, ஒரு சில படங்களில் நடித்து இருந்தவர், அதன் பிறகு சில காலம் திரையிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

    அவர் தற்போது, அவரே ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். அவரின் புகைப்படங்களும், சமீபத்திய பேட்டி ஒன்றும் வைரலாகி வருகிறது.

    அவரின் பேட்டியின் படி, சிறுத்தை படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது மூன்றரை வயது தானம். இவர் நடித்த ஒரு விளம்பரத்தை பார்த்து தான், சிறுத்தை சிவா, இவரை நடிக்க அணுகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சிறுத்தை படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    'சிறுத்தை' ரக்ஷனாவின் நேர்காணல்

    Karthi பொண்ணா இவங்க ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க! - Baby #Rakshana | #Siruthai | #PS2
    ▶️https://t.co/ziEqpgrOsF#siruthai #ponniyinselvan2 #karthi #babyrakshana #ssmusic pic.twitter.com/auwI7XTvSQ

    — SS Music (@SSMusicTweet) March 24, 2023

    'சிறுத்தை' ரக்ஷனா

    மணிரத்னம் படத்திலும் நடித்துள்ள ரக்ஷனா

    மணிரத்னம் இயக்கத்தில், கடல் படத்தில், ஹீரோயின் துளசியின் சிறு வயது கதாபாத்திரத்திலும் நடித்துள்ளாராம். அதனை தொடர்ந்து தான் ஓகே கண்மணி படத்தில் இவரை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவெடுத்தாராம்.

    அதன் பிறகு, திரிஷா இல்லைனா நயன்தாரா, பாண்டிய நாடு, நிமிர்ந்து நில் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ரக்ஷனா.

    அதன் பிறகு, திரையுலகிலிருந்து ஒதுங்கியது எதற்காக எனக்கேட்கப்பட்டதற்கு, பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டதால், திரையுலகை விட்டு சிறிய பிரேக் எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

    ரக்ஷனா தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாராம்!

    படிப்பின் மீது கவனம் இருப்பதால், அதிக படங்களை ஒத்துக்கொள்வதில்லை எனவும், நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், நிச்சயம் நடிப்பை தொடர்வேன் எனவும் ரக்ஷனா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ட்ரெண்டிங் வீடியோ
    தமிழ் திரைப்படம்
    கோலிவுட்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    ட்ரெண்டிங் வீடியோ

    ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பெண்மணி உலக செய்திகள்
    ப்ரேமம் படம் தான் கடவுள் எனக்கு கொடுத்த கிப்ட் - சாய்பல்லவி பேட்டி தமிழ் நடிகை
    வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ ஸ்டாலின்
    முதல் முறையாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்

    தமிழ் திரைப்படம்

    தமிழி: தமிழ் மொழியின் வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் ஓர் ஆவணப்படம்! தமிழ்நாடு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா? கோலிவுட்
    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ்நாடு

    கோலிவுட்

    நடிகர் சிம்பு படத்தில், சிறப்பு தோற்றத்தில் கமல் நடிக்கப்போகிறாரா? கமல்ஹாசன்
    'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா வைரலான ட்வீட்
    வெங்கட் பிரபு- நாக சைதன்யா 'கஸ்டடி' படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது படத்தின் டீசர்
    நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025