
நடிகர் அசோக் செல்வனுக்கு விரைவில் டும்டும்டும்; மணப்பெண்ணை பற்றி வெளியான புது தகவல்
செய்தி முன்னோட்டம்
தற்போது கோலிவுட்டில் இருக்கும் இளம் கதாநாயகர்களில், அசோக் செல்வனும் ஒருவர்.
'பில்லா 2' படத்தில், சிறு வயது அஜித்தாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், சூது கவும், பீட்சா-2,தெகிடி, ஓ மை கடவுளே என பல வெற்றி படங்களில் நடித்தார்.
இவர் தற்போது நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடித்து வருகிறார்.
இவருடன் நடிகை கீர்த்தி பாண்டியன் நடித்து வருகிறார். கீர்த்தி, நடிகரும் தயாரிப்பாளருமான, அருண் பாண்டியனின் மகளாவார்.
இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாகவும், இதற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், விரைவில் திருமண தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
அசோக் செல்வன், ஏற்கனவே சூப்பர்சிங்கர் புகழ் பிரகதி குருப்ரசாத்தை காதலிப்பதாக சில காலம் முன்னர் கிசுகிசுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஷூட்டிங் ஸ்பாட்டில் காதலில் விழுந்த அசோக் செல்வனும், கீர்த்தியும்
✨#AshokSelvan #KeerthiPandian are getting married very soon 😃
— Siva Prasanth (@Sivaprasanth5) March 19, 2023
✨They are acting in a movie together under Neelam Productions. pic.twitter.com/Z5QB3GgHmH