80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல்
1981-இல் ரஜினிகாந்த் நடிப்பில், வெளியான 'தில்லு முள்ளு' படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த படத்தில், 'சரோ' என்ற கதாபாத்திரத்தின் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நடிகை மாதவி. பல வெற்றிப்படங்கள் நடித்த மாதவி, திடீரென திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி விட்டார். ஆனால், அவர் இந்தியாவிற்கு வந்தே 30 வருடங்கள் ஆக போகிறதாம். அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. மாதவி, தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் சிறு வயதிலேயே நடனம் கற்றுக்கொண்டு, கிட்டத்தட்ட 1000 மேடைகளில் ஆடியுள்ளார். அவரின் சினிமா பயணத்தில், சறுக்கல் ஏற்பட்டபோது, என்ன செய்வது என குழம்பி இருந்ததாகவும், இதற்காக அவருடைய நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் ஆலோசனை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
உண்மையான சாமியாரின் வாக்கு
ரஜினியோ, இமயமலையில் இருக்கும் ஒரு சுவாமிஜியை சந்திக்கும்படி கூறியுள்ளார். ரஜினியின் ஆலோசனைப்படியே அங்கு சென்ற மாதவியை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த ஸ்வாமிஜி தெரிவித்துள்ளார். அதே கையோடு, தன்னுடைய பக்தன் ஒருவனையும் மணமகனாக தேர்வு செய்துள்ளார் ஸ்வாமிஜி. மணமகன் பெயர் ரால்ப் சர்மா. அவர் அமெரிக்கா வாழ், இந்தியா-ஜெர்மன் வம்சாவளியை சேர்ந்தவர். பிசினஸ்மேனான ரால்ப் அப்போது நஷ்டத்தில் இருந்தாராம். மாதவியை திருமணம் செய்தவுடன் ஏறுமுகமாக இருந்துள்ளது. திருமணத்தின் போதே அந்த ஸ்வாமிஜி கூறினாராம், திருமணம் முடிந்தால், மாதவியால் 30 வருடங்கள் இந்தியாவிற்கு வரவே முடியாதென்று. அதே போல, வியாபாரத்தையும், குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ள வேண்டி இருந்ததால், மாதவியால் 30 ஆண்டுகளாக இந்தியாவிற்கு வரவே முடியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.