
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அமீர் சமீபத்தில் ஒரு விழாவின்போது, பத்திரியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம், ஆஸ்கார் விருதை சுற்றி நடக்கும் சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது.
அவரும் விருது விழாவை சுற்றி நடைபெறும் அரசியல்களை பற்றியும் ஆமோதித்து இருந்தார். அப்போது அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை குறித்து பேசியது, தற்போது சர்ச்சையை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோ பதிவின்படி, சிவாஜி படத்திற்காக தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் விருது, ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது என்றும், ஆனால் அந்த காலத்தில் வெளியான படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, சிறந்த நடிகராக ரஜினிகாந்த் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் அவர் கூறி இருந்தார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் ஒரு சிறந்த என்டர்டேயினர் என்பதிலும் மாற்றுகருத்தும் இல்லை எனவும் கூறியுள்ளது, சர்ச்சையை ஈர்த்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சர்ச்சையான அமீரின் பேச்சு
Ameer comment on Rajinikanth for state award for Sivaji movie #ameer #rajinikanth #sivaji pic.twitter.com/auYNApdkv6
— R vaimozhi (@r_vaimozhi) March 18, 2023