Page Loader
அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம்
குழந்தை நட்சத்திரமாக, கமலுடன் நடித்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனுக்கு தாத்தாவாக கமல்ஹாசனா? வைரலாகும் புகைப்படம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2023
11:41 am

செய்தி முன்னோட்டம்

உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பேரனாக நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், கமல்ஹாசன், இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு பிறகு, தன்னுடைய மானசீக குருவாக கருதுபவர், சமீபத்தில் மறைந்த பழம்பெரும் இயக்குனர் கே. விஸ்வநாத்தை தான். அவரின் இயக்கத்தில், கமலும், ராதிகாவும் நடித்த படம் தான் 'கிளாசிக் திரைப்படம்' என இன்றளவும் பலரால் கொண்டாடப்படும், 'சிப்பிக்குள் முத்து' திரைப்படம். தெலுங்கில் 'ஸ்வாதி முத்யம்' என்ற பெயரில் வெளிவந்தது. அந்த படத்தில் தான், குழந்தை நட்சத்திரமாக, கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் பேரனாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படத்தில் இருந்து அவர் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

கமலின் பேரனாக அல்லு அர்ஜுன்