Page Loader
டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை
வரும் 24-ஆம் தேதி டி.எம்.சவுந்தர ராஜனின் நூற்றாண்டு விழா

டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 22, 2023
03:25 pm

செய்தி முன்னோட்டம்

பழம்பெரும் பாடகரான டி.எம்.சவுந்தர ராஜனுக்கு இந்த ஆண்டு 100-வது பிறந்தநாள். வரும் 24-ஆம் தேதி, அவரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அவரின் ரசிகர்களும், திரை துறையினரும் நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், அவரை கௌரவிக்கும் விதமாக, அன்னாரின் வீடு அமைந்திருந்த மந்தைவெளி, மேற்கு வட்ட சாலை (west circular road)-ஐ, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடிய டி.எம்.சவுந்தர ராஜன், கடந்த 2013-ஆம் ஆண்டு காலமானார். இவரின் கலை சேவையை பாராட்டி, இவருக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ பட்டம் குடுத்து கௌரவித்தது. சிறந்த முருக பக்தராக அறியப்பட்ட TMS , கிட்டத்தட்ட 2500 பக்தி பாடல்களை பாடியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

டி.எம்.சவுந்தர ராஜன் சாலை!