NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    "வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை
    விஜயகாந்திற்கு சம்பளம் தரமுடியாமல் திணறிய தயாரிப்பாளர்

    "வீட்டை எழுதி வாங்கிய விஜயகாந்த்": குற்றம் சுமத்தும், தயாரிப்பாளர் VA துரை

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 17, 2023
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    கேப்டன் விஜயகாந்த், அவர் பெயருக்கு ஏற்றார் போலவே கோலிவுட்டின் கேப்டனாக கோலோச்சியவர்.

    பல வெற்றி படங்களை தந்த விஜயகாந்த், பலருக்கும் உதவுபவர் என்று திரையுலகினர் அனைவராலும் புகழப்படுபவர். தற்போது உடல்நலம் குன்றி இருக்கும் போதும், அவரது கட்சி அலுவலகம் தேடி வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வதாக பரவலான பேச்சு உள்ளது.

    ஆனால், அவர் மீது இப்போது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார் தயாரிப்பாளர் V.A.துரை.

    'பிதாமகன்', 'கஜேந்திரா' போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை.

    சமீபத்திய செய்திகளின்படி, இவர் சிலஆண்டுகளாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. அதுகுறித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தனக்கு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    விஜயகாந்த்

    விஜயகாந்த் மீது குற்றம்சாட்டிய துரை

    அவரின் வீடியோ வைரல் ஆனதை அடுத்து, திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு பண உதவி செய்தனர்.

    நடிகர் சூர்யா, மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சத்தை வழங்கி இருந்தார். மேலும் நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் வழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களுடன், நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ 5. லட்சம் வரை வழங்குவதாக அறிவித்தார்.

    மறுபுறம் ரஜினிகாந்த், தன்னால் இயன்ற உதவியை செய்வதாக வாக்கு தந்தார் எனக்கூறப்பட்டது.

    இந்நிலையில், தயாரிப்பாளராக இருந்த காலத்தில், தான் ஒரு விஜயகாந்த் படம் எடுத்ததாகவும், அந்த படம் சரியாக ஓடவில்லை என்றும், துரையால், விஜயகாந்திற்கு சம்பளம் தரமுடியாத நிலை ஏற்பட்டதாகவும், அப்போது விஜயகாந்த், சம்பளத்திற்கு பதிலாக தன்னுடைய வீட்டை எழுதி வாங்கி கொண்டதாகவும் தற்போது புகார் தெரிவித்துள்ளார் துரை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கோலிவுட்

    நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும் - 2 தமிழ் திரைப்படம்
    நகைச்சுவை நடிகர்களும், அவர்களால் பிரபலமான பாடல்களும்-3 தமிழ் திரைப்படம்
    பாலாவின் 'வணங்கான்' படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகிறார் ரோஷ்னி பிரகாஷ் திரைப்பட அறிவிப்பு
    ஒரே போன் காலில், ஒரு லட்சத்தை இழந்த நடிகை நக்மா வைரல் செய்தி

    தமிழ் திரைப்படம்

    "நானும் ஒரு அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்" : நடிகை அனுஷ்கா அதிர்ச்சி தகவல் வைரல் செய்தி
    யோகி பாபுவுக்கு கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினார் எம்எஸ் தோனி கோலிவுட்
    AK 62 பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு லைகா நிறுவனம் தந்த அதிர்ச்சி திரைப்பட அறிவிப்பு
    ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது போஸ்டர் வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025