
நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா, சினிமாவில் நடிக்க போகிறாரா? RK செல்வமணி தகவல்
செய்தி முன்னோட்டம்
நடிகையும், தற்போதைய ஆந்திரபிரதேசத்தின் மந்திரியுமான ரோஜா மற்றும் FEFSI தலைவரும், இயக்குனருமான RK செல்வமணி தம்பதியினரின் மகள், அன்ஷுமாலிகா. இவரின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரல் ஆவதுண்டு. அச்சுஅசல், சிறுவயது ரோஜாவை போன்றே இருக்கும் அன்ஷு மாலிகாவை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர். அவ்வப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் எனவும் செய்திகள் வருவதுண்டு.
சென்ற ஆண்டு கூட, தெலுங்கு படம் ஒன்றில், துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க போகிறார் என செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அதை ரோஜாவும், செல்வமணியும் மறுத்து வந்தனர். அப்போது அவர்கள் கூறிய காரணம், தங்களது மகள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகவும், அதனால் படம் எதிலும் தற்போது ஒப்பந்தமாகவில்லை எனக்கூறி இருந்தார்.
ரோஜா-செல்வமணி
படிப்பில் ஆர்வம் உள்ள அன்ஷு
இந்நிலையில், தற்போது மீண்டும் அன்ஷுமாலிகா நடிப்பது குறித்த வந்ததிகள் கிளம்பிய நிலையில், அதற்கு விளக்கம் தந்துள்ளார் செல்வமணி.
அவர் கூறியதாவது, "தற்போது எங்கள் மகள் படிப்பில் ஆர்வமாக இருக்கிறாள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணினி துறை சார்ந்த படிப்பை மேற்கொண்டுள்ளார். அவர் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவி எனவும் பெயர் எடுத்துள்ளார். அதனால், தற்போது அவரின் கவனம் படிப்பில் தான் உள்ளது. எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை எங்கள் பிள்ளைகளுக்கு, அளித்துளோம். அவர் எதிர்காலத்தில் எந்த முடிவு எடுத்தாலும், நாங்கள் உறுதுணையாக இருப்போம். ஆனால் தற்போது அவருக்கு நடிப்பதில் ஆர்வமில்லை", எனக்கூறியுளார்.
நடிகை ரோஜாவும், செல்வமணியும் பல ஆண்டுகள் காதலித்து, கடந்த 2002ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு, கிருஷ்ணா லோஹித் என்ற மகனும் உள்ளார்.