
யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
கடந்த 2021-ஆம் ஆண்டு, நடிகை யாஷிகா, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உற்பட்ட ECR-ல், இரவுநேர பார்ட்டி முடித்து விட்டு, திரும்பியபோது, மிக பெரிய விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
வேகமாக காரை ஒட்டி வந்த யாஷிகா, கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் மோதினார். அதில் கார் கவிந்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளி என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரை வேகமாக ஒட்டிய குற்றத்திற்காகவும், அதில் ஒரு நபர் பலியானதிற்காகவும், யாஷிகாவின் மீது வழக்கு தொடுத்திருந்தனர் போலீசார்.
தற்போது, அந்த விபத்தில் இருந்து மீண்டு, சில படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கும் யாஷிகா, வழக்கு விசாரணை அன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் அஜார் ஆகாததால், அவருக்கு பிடி வாரென்ட் பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
ட்விட்டர் அஞ்சல்
யாஷிகாவிற்கு வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
யாஷிகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!#சினிமா #சினிமாசெய்தி #யாஷிகாஆனந்த் #யாஷிகா #பிடிவராண்டு #நீதிமன்றம் #வழக்கு #விபத்து #வழக்கு #Cinema #CinemaNews #YashikaAnand #Yashika #PD #Varandu #Court #Case #AccidentCase #Tamil #tamilNews #tnmeida tnmedia24 @Yashikaanand8 pic.twitter.com/go41aWZb1q
— TNMedia24 (@tnmedia24) March 23, 2023