NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பார்வதி நாயர் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை: பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பார்வதி நாயர் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை: பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்
    கோலிவுட்டில் அவ்வப்போது நடைபெறும் திருட்டு சம்பவங்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்துகிறது

    பார்வதி நாயர் முதல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வரை: பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 22, 2023
    12:14 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து, பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம், அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

    போலீஸ் விசாரணையில், அந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஈஸ்வரி என்ற பெண்மணியும், அவரின் கணவரும் தான் எனத்தெரியவந்தது.

    இப்படி கோலிவுட்டில் மேலும் சில பிரபலங்கள் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் பற்றி ஒரு தொகுப்பு:

    RK : மறைந்த நடிகர் RK, ஒரு நடிகர் மட்டுமின்றி அரசியல்வாதியும் கூட. அவர் 'எல்லாம் அவன் செயல்' என்ற படத்தின் மூலம் பிரபலமானார். ஒரு நாள், RK வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது மனைவியை கட்டி போட்டுவிட்டு, வீட்டிலிருந்த 200 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றது ஒரு கும்பல்.

    கொள்ளை

    அநேக நேரம், வீட்டில் இருக்கும் பணியாள் தான் கொள்ளைக்காரர்களாக மாறிவிடுகின்றனர்

    உடனே, தனிப்படை அமைத்து, அந்த கும்பலை நேபாளத்தில் கண்டுபிடித்தனர் போலீசார்.

    பார்வதி நாயர்: சென்ற அக்டோபர் மாதம், நடிகை பார்வதி நாயர் வீட்டிலிருந்து, ரூ.6 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவற்றை, அவரின் வீட்டின் பணியாள் திருடியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

    நிக்கி கல்ராணி: சென்னையில் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் இவரிடம், பல லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் 40,000 ரொக்க பணத்தையும் அவரின் வீட்டில் இருந்த வேலையாள் திருடி உள்ளார். CCTV காட்சிகள் மூலம் கொள்ளைக்காரன் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தனியார் ஏஜென்சி மூலம் பணிக்கு சேர்க்கப்பட்ட தனுஷ் என்ற நபர் தான், தன் கைவரிசையை காட்டியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    கோலிவுட்

    MeToo இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் பல்லவி: 'வாய்மொழியாக திட்டுவதும் கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான்' வைரல் செய்தி
    தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள் தமிழ் திரைப்படம்
    சிறு வயது கீர்த்தி சுரேஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    விரைவில் வர போகிறது திரிஷ்யம் 3; பான் இந்தியன் படமாக வெளியிட திட்டம் திரைப்பட அறிவிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025