
'பிதாமகன்' படத்திற்காக பாலா, விக்ரம், சூர்யா பெற்ற சம்பள விவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் விஏ துரை
செய்தி முன்னோட்டம்
பிதாமகனின் தயாரிப்பாளரான VAதுரை, உடல்நலம் குன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு நிதி உதவி செய்வதற்கு முன் வந்தனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் அவருடன் தொலைபேசியில் பேசி, நம்பிக்கையூட்டினார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றிற்கு, VAதுரை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் ஒரு பகுதி தற்போது, இதில் வைரலாக பரவி வருகிறது.
அதில், 'பிதாமகன்' படத்துக்காக, அந்த படத்தில் நடித்த சூர்யா, விக்ரம் மற்றும் இயக்குனர் பாலா எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்பது குறித்த விவரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, பாலா, விக்ரம், சூர்யா ஆகியோர் மூவரும் முறையே 1.25 கோடி, 1.15 கோடி மற்றும் 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிதாமகன் படத்தின் சம்பள விவரம்
#Suriya na just got 5Lac salary for #Pithamagan considering producers financial situation..
— ꧁ Bᴀʀᴀᴛʜ Sғᴄ ꧂ (@BarathSalemSfc) March 7, 2023
Even now he gave 2.39lac back for that producer hospital expenses..
Gem Na Nenga Epayumey @Suriya_offl Anna🛐♥️👑🙏#Suriya42 #VaadiVaasal#KadavulSuriya pic.twitter.com/MLeagTwo0g