இந்தியாவில் முதல்முறையாக 'Music Entrepreneurship' துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதி
நேற்று 'வேல்ஸ்' நிறுவனத்தின் IPO விழா நடைபெற்றது. அதில் பங்குகொண்ட இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர், "நான் பிஹெச்டி முடித்துள்ளேன். இது படிச்சு வாங்குன டாக்டர் பட்டம். இனிமேல் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றே அழைக்கலாம். இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். இந்தியாவிலே முதன்முறையாக இந்த துறையில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளது இதுதான் முதல் முறை. படிப்பில் அதிக கவனம் செலுத்தி ஆறு ஆண்டுகளில் இந்த டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளேன்." எனக்கூறினார். முதலில், ஒரு பிரைவேட் ஹிப்ஹாப் தமிழ் ஆல்பம் மூலமாக தான் அறிமுகம் ஆனார் ஆதி.
Dr .ஹிப்ஹாப் தமிழா ஆதி!
அந்த அல்பத்தில் வெளியான 'club ல , மப்புல' என்ற பாடல் ஒரே இரவில் வைரல் ஆனது. அதன் பிறகு, 'வாடி புள்ள வாடி' என்ற பாடலும் ஹிட் ஆனது. அந்த பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பிற்கு பிறகு, ஒன்றிரண்டு தமிழ் திரைப்பட பாடல்களை பாடிய ஆதி, 'ஆம்பள' படத்தின் மூலமாகதான் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். தனி ஒருவன், அரண்மனை 2, போன்ற படங்களுக்கு இசையமைத்தார். அதன் பின்னர், 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம், நடிகராகவும், இயக்குனராகவும் அறிமுகம் ஆனார். இது அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும், அவரின் திரைபயணத்தை பற்றியது எனவும் கூறப்பட்டது. தொடர்ந்து, 'நட்பே துணை', 'மீசையை முறுக்கு' என இது வரை 5 வெற்றி படங்கள் நடித்துள்ளார்.