Page Loader
ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஹிப்ஹாப் ஆதியின் 'வீரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
12:38 pm

செய்தி முன்னோட்டம்

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி வரும் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியானது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வரும் கோடை விடுமுறையின் போது திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை 'மரகத நாணயம்' புகழ் ஏஆர்கே சரவணன் இயக்குகிறார். படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். ஆதியின் முந்தைய படங்களான, 'சிவகுமாரின் சபாதம்', 'அன்பறிவு' போன்ற படங்களை தயாரித்துள்ளனர். இந்த படத்தில், ஆதிக்கு ஜோடியாக, ஆதிரா ராஜ் நடிக்கிறார். இவர்களுடன், முனிஷ்காந்த், காளி வெங்கட், மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை, ஹிப்ஹாப் ஆதி தான். மாயாஜால படத்தை போல தோற்றமளிக்கும் இந்த படத்துக்காக, ஆதி, தன்னை, கிட்டத்தட்ட 6 மாதங்கள் தயார் செய்ய வேண்டி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக்!