மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் 60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா?
தமிழ் படங்களுக்கு, இந்தியா தாண்டி, ரசிகர்கள் ஏராளம் இருக்கும் நாடு மலேஷியா மற்றும் சிங்கப்பூர் தான் என கூறும் அளவிற்கு, அங்கு நம்மூர் படங்களுக்கும் நடிகர்களுக்கும் வரவேற்பும் அதிகம். நம் நாட்டை போல, வெளிநாடுகளில் நாட்கணக்கில் படங்கள் ஏதும் ஓடாது. மாறாக 1, 2 வாரங்கள் தான் திரையிடப்படும். இந்த விதி அனைத்து மொழி படங்களுக்கும் பொருந்தும். ஆனால், அந்த சூழ்நிலையிலும், மலேஷியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில், 60 நாட்கள் கடந்து வெற்றிகரமாக திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் எது தெரியுமா? ஏவிஎம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில், இயக்குனர் R.V.உதயகுமார் இயக்கத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட 'எஜமான்' திரைப்படம் தான் அது.
60 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தமிழ் திரைப்படம்
30 ஆண்டுகள் நிறைவு செய்த எஜமான்
இந்த திரைப்படம், 1993 , பிப்ரவரி 18 அன்று வெளி வந்தது. இந்த படத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல் தருணங்கள் உண்டு. 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்துடன் நடித்த மீனா, இந்த படத்தின் மூலம், அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் நடிக்கும் போது, அவருக்கு வயது 15 தானாம். AVM குழுமத்திற்கும், இளையராஜாவுக்கும் இடையில் இருந்த பனிப்போர், சமரசம் செய்யப்பட்டு, நீண்ட காலத்திற்கு பிறகு இருவரும் இணைந்த படம் இதுவென்றும் அப்போது பரவலான பேச்சு எழுந்தது. இந்த படத்தின் வெற்றிகொண்டாட்டத்தின் அடையாளமாக, ரசிகை ஒருவர் எழுதிய கடிதத்தை, ஏவிஎம் குழுமம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் ஒரு பெண்மணி, 'எஜமான்' போலவே ஒரு மணமகன் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.