Page Loader
நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி
நடிகர் பொன்னம்பலத்தை காப்பாற்றிய நடிகர் சிரஞ்சீவி

நடிகர் பொன்னம்பலத்தின் மருத்துவ செலவுகளை ஏற்ற நடிகர் சிரஞ்சீவி

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2023
10:21 am

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவில் பிரபலமான வில்லன் நடிகர் பொன்னம்பலம். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தோன்றி இருந்தார். நடிகர் பொன்னம்பலம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிறுநீரக பிரச்சனையில் தவித்து வந்தார். அவர் சமீபத்தில் சிறுநீரக மாற்று சிகிச்சையும் பெற்றார். பொன்னம்பலம், ஆரம்ப கட்டத்தில் சிறுநீரக பிரச்சனையில் தவித்து வந்தபோதே, தமிழ் திரையுலக பிரபலங்கள் உதவி செய்ததாக தெரிவித்தார். அப்போதே தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி 2 லட்சம் வரை நிதி உதவி செய்ததாக தெரிவித்திருந்தார். தற்போது, மீண்டும் அவர் உடல்நலம் குன்றியதால், பலரிடம் உதவி கேட்டதாகவும், நடிகர் சிரஞ்சீவிக்கு உதவி கேட்டு மெசேஜ் செய்திருந்தாகவும் அவர் தெரிவித்தார். பொன்னம்பலம் அனுப்பிய செய்தியை பார்த்தவுடனே, நடிகர் சிரஞ்சீவி அவரை அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொன்னம்பலம்

பொன்னம்பலத்திற்கு உதவிய மெகாஸ்டார்

பொன்னம்பலம் உதவி கேட்டதும், அவரை தொடர்புகொண்டு பேசிய மெகாஸ்டார் சிரஞ்சீவி, பொன்னம்பலத்தால், ஹைதெராபாத் வரை பயணம் செய்ய முடியுமா எனக்கேட்டதாகவும், ஆனால், தன்னால் குடும்பத்தினரை இங்கே விட்டுவிட்டு வர இயலாதென்று தெரிவித்ததாகவும் பொன்னம்பலம் தெரிவித்தார். உடனே, சிரஞ்சீவி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு போக சொன்னதாகவும், அதன்பிறகு, தான் பார்த்துக்கொள்வதாகவும் சிரஞ்சீவி வாக்கு தந்ததாக, பொன்னம்பலம் தொடர்ந்து கூறினார். தனக்கு டயாலிசிஸ் செய்வதற்குதான், அப்போல்லோவிற்கு போக சொன்னதாக நினைத்தாராம் பொன்னம்பலம், ஆனால் கிட்டத்தட்ட 45லட்சம் ருபாய் வரை செலவு செய்து, தன்னை காப்பாற்றி உள்ளதாகவும், அப்போலோ மருத்துவமனையில் தன்னிடம் ஒரு பைசா கூட வாங்கவில்லை எனவும், அனைத்தையும் சிரஞ்சீவி ஏற்றுக்கொண்டார் எனவும் அவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.