Page Loader
கோடிகளில் சம்பளம் வாங்கும் சீதாராமம் நடிகை மிருணாள் தாக்கூர்
நடிகை நயன்தாராவிற்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை மிருணாள் தாக்கூர்

கோடிகளில் சம்பளம் வாங்கும் சீதாராமம் நடிகை மிருணாள் தாக்கூர்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2023
12:09 pm

செய்தி முன்னோட்டம்

'சீதாராமம்' படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், தமிழ் திரையுலகத்திற்கு பரிச்சயமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். 'சீதாராமன்' பான் இந்தியன் படமாக வெளிவந்து, அமோக வெற்றியும் பெற்றது. இதனை அடுத்து, அடுத்தடுத்த படங்களில் வேகமாக கமிட் ஆனார் மிருணாள். அதனை தொடர்ந்து தனது சம்பளத்தையும் அவர் உயர்த்தி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர் அடுத்து தெலுங்கு நடிகர் நானியுடன் நடிக்கவிருக்கும் படத்திற்கு அவருக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ருபாய் 10 கோடி வரை சம்பளம் வாங்கும் நயன்தாராவிற்கு அடுத்தபடியாக காஸ்டலி நடிகையாக மாறியுள்ளார் இவர். கடந்த 2014 ஆண்டில், மராத்தி படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் மிருணாள் தாக்குர்.

மிருணாள்

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த மிருணாள்

அதன் பின்னர் தொலைக்காட்சி பக்கம் ஒதுங்கிய அவர், ஒன்றிரண்டு ஹிந்தி படங்களில் நடித்திருந்தார். சூப்பர் 30 என்ற படத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் நடித்த போது தான் அவர் மெல்ல வெளியுலகிற்கு பரிச்சயம் ஆனார். அதன் பிறகு தெலுங்கில் நானி நடித்து வெற்றி அடைந்த ஜெர்சி படத்தின் ஹிந்தி பதிப்பில், முன்னணி நடிகையாக நடித்திருந்தார். அப்போதுதான் சீதாராமம் படத்தில் அவர் ஒப்பந்தமானார். சீதாராமம் வெற்றிக்கு பிறகு, தற்போது பல படங்களில் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். ஊடக செய்திகளின் படி, மேலும் 2 தெலுங்கு, 2 தமிழ், ஒரு மலையாளப் படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும், அதை பற்றிய அதிகார பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.