'ஹாப்பி பர்த்டே செல்லம்': இன்று நடிகர் பிரகாஷ்ராஜின் பிறந்தநாள்
இந்தியா சினிமாவே கொண்டாடும் நடிகர் பிரகாஷ்ராஜ் எனக்கூறலாம். வில்லன் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரகாஷ்ராஜ், தன்னுடைய நடிப்பு திறமையை மெருகேற்றி, குணச்சித்திர நடிகராகவும், ஹீரோவாகவும், சில நேரங்களின் காமெடியிலும் கலக்கி வருகிறார். இன்று, அவரின் 58-வது பிறந்த நாள். இந்த நாளில், அவரை பற்றி தெரிந்தவைகளையும், தெரியாதவைகளை பற்றியும் ஒரு சிறிய தொகுப்பு. 1965 ஆண்டு, பெங்களூரில், பிரகாஷ் ராய்-யாக பிறந்தவர் பிரகாஷ்ராஜ். பிரகாஷ் ராஜ், இதுவரை, ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், எட்டு நந்தி விருதுகள், எட்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் தெற்கு, நான்கு SIIMA விருதுகள், மூன்று சினிமா விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
'சுந்தரச்சோழர்' பிரகாஷ்ராஜ்
பன்மொழி புலமை பெற்றவர் பிரகாஷ் ராஜ் - கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளை அறிந்தவர் அவர் தனது 7 வயது முதல் தெருக்கூத்துகளிலும், மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார். இது வரை 2000 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இன்றும் தனது குருவாக மறைந்த இயக்குனர் பாலச்சந்தரை கருதுகிறார். அவர் அறிமுகமான 'டூயட்' படத்தின் நினைவாக 'டூயட் மூவிஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இயற்கை விவசாயத்தை அடிப்படையாக கொண்டு, ஹைதராபாதில் ஒரு தோட்டத்தை பராமரித்து வருகிறார். பூச்சிக்கொல்லிகள் அற்ற விவசாயத்தை வளர்ப்பதே தனது நோக்கம் என அவர் கூறுகிறார். தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் சுந்தரசோழராக நடித்துள்ளார்.