
'அகிலன்','அயோத்தி' படங்களின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
ஜெயம் ரவி நடிப்பில் சென்ற வாரம் வெளியான படம் தான் 'அகிலன்'. இந்த படத்தை, என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியுடன் இணைந்து 'பூலோகம்' என்ற படத்தை தந்திருந்தார்.
பரவலான வரவேற்பை பெற்றிருந்த இந்த திரைப்படம், சென்ற வாரம் மார்ச் 10ஆம் தேதி தியேட்டரில் வெளியானது.
மறுபுறம், சசிகுமார் இயக்கத்தில், 'அயோத்தி' என்ற படமும் மார்ச் முதல் வாரம் வெளியானது பெரிதாக விளம்பரம் செய்யப்படாத இந்த படம், வாய்மொழி விமர்சனங்களால், இன்றும் ஹவுஸ்புல்-ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது இவ்விரண்டு படங்களின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் படி, இவ்விரண்டு படங்களும், மார்ச் 31-ஆம் தேதி, Zee5 தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ட்விட்டர் அஞ்சல்
அகிலன், அயோத்தி ரிலீஸ் தகவல் வெளியானது
#Agilan and #Ayothi from March 31 on streaming platform, Zee5 🍿 pic.twitter.com/Hpb0PJxUKE
— LetsCinema (@letscinema) March 17, 2023