Page Loader
சிம்ரன் 50: முதல் முறையாக இந்த நடிகருடன் இணைகிறார்!
லைலா-ஆதியுடன் சப்தம் படத்தில் இணைகிறார் சிம்ரன்

சிம்ரன் 50: முதல் முறையாக இந்த நடிகருடன் இணைகிறார்!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 17, 2023
09:32 am

செய்தி முன்னோட்டம்

நடிகை சிம்ரனுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. திருமணத்திற்கு பின்னர் சில காலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன், தற்போது தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்துடன் 'பேட்ட' படத்தில் நடித்திருந்தார். தற்போது சிம்ரன், தன்னுடைய 50 -வது படமாக ஆதியின், 'சப்தம்' திரைப்படத்தை தேர்வு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பை, படக்குழு நேற்று மாலை அறிவித்தது. இந்த படத்தில் ஏற்கனவே லைலா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மற்றுமொரு சுவாரஸ்யமான விஷயம், 'பார்த்தேன் ரசித்தேன்' படத்திற்கு பிறகு, சிம்ரனும், லைலாவும் இணையும் படம் இந்த 'சப்தம்'. சிம்ரன் தற்போது, பிரஷாந்த்துடன் இணைந்து, 'அந்தகன்' படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

சிம்ரன் 50!