பர்த்டே ஸ்பெஷல்: நடிகை ஷோபனாவின் 53 -வது பிறந்த நாள் இன்று
'திருவிதாங்கூர் சகோதரிகள்' என்று அழைக்கப்படும், பழம்பெரும் நடிகைகளான 'லலிதா-பத்மினி-ராகினி' ஆகியோரின் சகோதரர் மகள் தான் நடிகை ஷோபனா. நடிப்பு மட்டுமின்றி, தன் அத்தைகளை போலவே நாட்டியத்தில் சிறந்து விளங்குபவர் ஷோபனா. நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக, திரையுலகில் கால் வைத்த ஷோபனா, சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை 'மங்கள நாயாகி' என்ற படத்துக்காக பெற்றார். அதன் பிறகு, சிறிது இடைவேளை விட்டிருந்த ஷோபனா, தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அவ்வப்போது தமிழ் படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடித்தது மட்டுமின்றி, ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார் ஷோபனா.
ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்ட ஷோபனாவை, மனம் மாற்றிய பாக்யராஜ்
'எனக்குள் ஒருவன்' என்ற தமிழ் படத்தின் மூலம் மீண்டும் ஹீரோயினாக என்ட்ரி தந்த ஷோபனா, அவர் நடித்த சில தமிழ் படங்கள் தோல்வி ஆனதும், ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். அதனால், மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த அவரை, வலுக்கட்டாயமாக மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தவர் பாக்யராஜ் தான், 'இது நம்ம ஆளு' படத்திற்காக. அந்த படத்தில் அவர் நடித்த 'மாமி' வேடம், இன்றும் பல படங்களுக்கு ரெபெரென்ஸ் புக். அதன்பிறகு, மணிரத்னம் இயக்கத்தில், ரஜினியுடன் நடித்த 'தளபதி' திரைப்படம், அவருக்கு நல்ல பேரை வாங்கி தந்தது. நடிகை ரேவதி, இயக்குனராக அவதாரம் எடுத்த 'மித்ர, my friend' என்ற ஆங்கில திரைப்படத்திற்காக, ஷோபனா தேசிய விருதும் பெற்றார்.