Page Loader
'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா
ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்த கங்கனா ரனாவத்

'அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, அற்புதமான மனிதரும் கூட', என ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2023
06:48 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை கங்கனா, தற்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நடிகை கங்கனாவின் பகுதிகள் மட்டும் மிச்சம் இருந்தது போலும். அதுவும் தற்போது முடிவடையஉள்ளது. இந்நிலையில், தன்னுடன் நடித்த ராகவா லாரன்ஸை பற்றி புகழ்ந்து ஒரு பதிவை இட்டுள்ளார். "சந்திரமுகியில் நான் இன்று எனது பாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது...லாரன்ஸ் மாஸ்டர் என்று பிரபலமாக அறியப்படும் அவரால் ஈர்க்கப்பட்டேன், ஏனெனில், அவர் ஒரு பிளாக்பஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர்/சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, மிகவும் கனிவான மற்றும் அற்புதமான மனிதரும் கூட..." என புகழ்ந்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கங்கனாவிற்கு பிரியாவிடை தந்த படக்குழு

ட்விட்டர் அஞ்சல்

ராகவா லாரன்ஸை புகழ்ந்த கங்கனா