உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்
நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி, இன்று காலை 10.12 மணிக்கு, ஹெலிகாப்டர் ரேடாரின் தொடர்பை இழந்துள்ளது.
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தங்கள் நிறுவனத்திலிருந்து 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வரை ஒவ்வொரு கட்டமாக பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது அந்நிறுவனம்.
உலகளவில், அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடாக இந்தியா முன்னிலை; கடைசி இடத்தில் ரஷ்யா
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா டாப் லிஸ்டில் இருக்கும் வேளையில், வேறு ஒரு விஷயத்திலும், தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு விஷயத்தில் தான் அது!
சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்
சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கட்கிழமை (ஜூலை 10) நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலிக்காக 900 கோடி சொத்தை விட்டு செல்வதாக உயில் எழுதிய இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர்
கடந்த மாதம் இறந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, 100 மில்லியன் யூரோக்களை, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 9,05,86,54,868, தனது 33 வயது காதலியான மார்டா ஃபசினாவிற்காக விட்டு செல்வதாக, தனது உயிலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்
உலகளவில் பிரபலமான ஊடகமாக செயல்பட்டு வரும் BBC நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி சில குழுக்கள் போராடி வருகின்றன. இந்த குழுக்கள் பொதுவாக காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் என்று அழைக்கப்படுகிறது.
கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது
கனடாவின் டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே நேற்று(ஜூலை 8) நடைபெற்ற இந்திய எதிர்ப்பு பேரணியில் வன்முறை வெடித்ததால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா
500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.
டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது?
ஐரோப்ப நாடுகளில் நிலவி வரும் பெரும் பிரச்சனையான குடியேற்றத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து நான்கு கட்சிக் கூட்டணிக்குள் சமரசம் செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் டச்சு அரசாங்கம் நேற்று(ஜூன் 7) கலைக்கப்பட்டது.
உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்
1947ம்ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தினை ஆங்கிலேயரிடம் இருந்து போராடிப்பெற்றது.
ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு
ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம், சுனாமியால் பாதிக்கப்பட்டது. அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை, பசிபிக் பெருங்கடலில் வெளியிடுவதற்கான ஜப்பானின் திட்டத்திற்கு, ஐநா சபை ஒப்புதல் அளித்துள்ளது.
மெக்சிகோவில் 27 உயிர்களை காவு வாங்கிய பேருந்து விபத்து
மெக்சிகோ, ஓஹஸ்கா மாகாணத்தில், பேருந்து ஒன்று, பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துகுள்ளானதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன மாடு
ஆந்திர மாநிலம் நெல்லூரை பூர்விகமாக கொண்ட பசுக்களுக்கு பிரேசில் உள்ளிட்ட உலக நாடுகளில் கிராக்கி அதிகரித்து வருகிறது.
லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி
லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்
ரஷ்யாவின் தெற்குப் பகுதியான செச்சினியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்திய 'நோவாயா கெஸட்டா' செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் எலெனா மிலாஷினா நேற்று(ஜூலை 4) முகமூடி அணிந்த நபர்களால் தாக்கப்பட்டார்.
வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் கோகையின் (போதை பொருள்) என அடையாளம் காணப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை: தலிபான் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அகிஃப் மஹஜர் டோலோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை(உள்ளூர் நேரம்) காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவைக்கத்தனர்.
கனடாவில் இருக்கும் இந்திய தூதர்களுக்கு மிரட்டல்: இந்தியா கவலை
கனடாவில் உள்ள இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து கனேடிய அதிகாரிகளிடம் இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.
தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா
சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா, திடீரென திட்டமிடாமல் பாகிஸ்தானிற்கு சென்று வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
போர் விமான இயந்திரங்களை தயாரிக்க இந்தியாவுடன் இணைந்தது பிரான்ஸ்
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில், இரட்டை என்ஜின் மேம்பட்ட போர் விமானம் (AMCA) மற்றும் இந்திய விமானம் தாங்கி கப்பல்களுக்கான இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர் விமானம்(TEDBF) ஆகியவற்றை இயக்கும் இன்ஜிங்களை உற்பத்தி செய்ய இந்தியாவுடன் இணைந்திருக்கிறது ஐரோப்பிய நாடான பிரான்ஸ்.
பிரான்ஸ் துப்பாக்கிச் சூடு: 5 நாட்களாகியும் ஓயாத கலவரம்
பிரான்ஸில் 5 நாட்கள் ஆகியும் ஓயாத கலவரத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
நாடே பற்றி எரியும் போது இசை கச்சேரிக்கு சென்ற பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் பெரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பாரிஸில் நடந்த எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன?
கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 27), தனது மெர்சிடிஸ் காரில் பயணம் சென்று கொண்டிருந்த நஹெல்(17) என்ற இளைஞரை பிரான்ஸ் போலீஸார் சுட்டு கொன்றனர்.
அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பல்கலைக்கழக சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை தடை செய்வதற்கான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அனைத்து எழுத்தாளர்களையும் கூண்டோடு பணி நீக்கம் செய்தது நேஷனல் ஜியோகிராஃபிக்
புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து முழுநேர எழுத்தாளர்களையும் புதன்கிழமை (ஜூன் 28) பணியிலிருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்
கடந்த 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலுக்கடியில் உள்ளது.
ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின்
ரஷ்யாவில் இராணுவ கிளர்ச்சியை வழி நடத்தி, இரண்டு நாட்களுக்குள் ரஷ்ய அதிபர் புதினின் வயிற்றில் புளியை கரைத்த வாக்னர் கூலிப்படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் பெலாரஸ் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
மனஅழுத்தத்திற்காக மயக்க மருந்தைப் பயன்படுத்துகிறாரா எலான் மஸ்க்?
மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகிய காரணங்களுக்காக, 'கீட்டாமின்' என்ற மருந்தை எலான் மஸ்க் எடுத்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்காவின் பிரபல தனியார் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்க H1-B விசா வைத்திருப்பவர்கள் இனி கனடாவிலும் வேலை செய்யலாம்
அமெரிக்காவின் H-1B விசா வைத்திருக்கும் 10,000 பேருக்கு கனடாவில் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என்று கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு நெருக்கடி: வெள்ளை மாளிகை கண்டனம்
அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த போது, பிரதமர் மோடியிடம் முஸ்லீம்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை இணையவாசிகள் அதிகமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
தீபாவளியை பள்ளி விடுமுறையாக அறிவித்தது நியூயார்க்
நியூயார்க் நகரில் தீபாவளிக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
LeT, JuD போன்ற பயங்கரவாத குழுக்களையும், அவற்றின் பல்வேறு முன்னணி அமைப்புகளையும் நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா
ரஷ்ய பாராளுமன்றம் தனியார் இராணுவ நிறுவனங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
டைட்டன் நீர்மூழ்கி: ரூபிக்ஸ் கியூபுடன் கடலுக்குள் சென்ற இளைஞனின் கதை
அமெரிக்காவின் டைட்டன் நீர்மூழ்கி விபத்தில் உயிரிழந்த சுலேமான் தாவூத் என்ற 19 வயது இளைஞன், கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ரூபிக்ஸ் கியூபை தன்னுடன் எடுத்துச் சென்றதாக அவரது தாயார் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நீண்ட கால ஆட்சிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த வாக்னர் ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்ததை அடுத்து, ரஷ்யாவில் ஒரு பயங்கரமான அமைதி நிலவி வருகிறது.
இந்தியாவில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகிறார்களா: சர்ச்சையான கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கான உரிமைகள் என்ன நிலையில் உள்ளது என்று அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
"இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.