
உலகளவில் 21ம் நூற்றாண்டில் விடுதலை பெற்ற இளம் நாடுகள்
செய்தி முன்னோட்டம்
1947ம்ஆண்டு இந்தியா தனது சுதந்திரத்தினை ஆங்கிலேயரிடம் இருந்து போராடிப்பெற்றது.
அதேபோல் பல நாடுகள் வேறுநாடுகளிடம் இருந்து பிரிந்தோ, அடிமைகளாகவோ இருந்து அதிலிருந்து விடுபட்டு சுதந்திரநாடுகளாக தங்களது நாடுகளை அறிவித்துக்கொண்டது.
இவ்வாறு தான் 195 தனிநாடுகள் உருவானது.
இதுபோல் தனி நாடுகளாக பிரிந்த 5 இளம் நாடுகளின் விவரங்கள் குறித்துத்தான் இந்த செய்திக்குறிப்பில் கூறப்படவுள்ளது.
இன்றளவில் உலகின் மிக இளம்நாடு என்றால் அது தெற்கு சூடான் தான்.
இந்நாடு 1899ம்ஆண்டுமுதல் 1956வரை இங்கிலாந்து மற்றும் எகிப்து நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதன்பின்னர் 1972 முதல் 2005 வரை உள்நாட்டு போர்களை எதிர்கொண்டு தன்னை தனி நாடாக அறிவித்து கொண்டது.
இதனைத்தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய தீவு நாடான கிழக்கு திமோர் மே-மாதம் 20,2022ல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது.
இளம் நாடுகள்
19ம் நூற்றாண்டில் செர்பியா தனிப்பிராந்தியமானது
16ம்நூற்றாண்டில் இந்த நாடு போர்ச்சுகல் நாட்டிற்கு அடிமையாக இருந்து 1975ல் விடுதலை பெற்றது.
ஆனால் மீண்டும் ஒரே வாரத்தில் இந்தோனேஷியா இப்பகுதிகளை ஆக்கிரமித்தது.
பழங்காலத்தில் பல்வேறு பேரரசர்களால் ஆளப்பட்ட கொசோவோ அண்டை நாடான செர்பியாவிடமிருந்து பிப்ரவரி 17, 2008ல் பிரிந்து தனது சுதந்திரத்தினை அறிவித்தது.
எனினும் இந்நாட்டினை ஒரு இறையாண்மை நாடாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நாட்டிலுள்ள மக்களுள் 95%பேர் அல்பேனியர்கள் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, 2006ம்ஆண்டு ஜூன் 2ம்தேதி மாண்டினீக்ரோ தனிஇராச்சியமாக மாறியது,இதுவும் செர்பியாவிலிருந்து பிரிந்ததுத்தான் என தெரிகிறது.
செர்பியர்கள் 6.7ம் நூற்றாண்டுகளில் இடம்பெயர்ந்து மற்ற தெற்கு ஸ்லாவிக் பழங்குடியினருடன் பால்கனுக்கு வந்துள்ளனர்.
19ம்நூற்றாண்டில் செர்பியா தனிப்பிராந்தியமானது.
2ம் உலகப்போருக்கு பின்னர் யுகோஸ்லோவியா'வாக இருந்த செர்பியா மாண்டினீக்ரோ பிரிந்தப்பின்னர் தனிநாடாக மாறியது.