'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
செய்தி முன்னோட்டம்
சீனாவின் வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், "மக்களைப் பாதிக்கும் வகையில் கொரோனா வைரஸை வேண்டுமென்றே உருவாக்கி பரப்பியது சீனா தான்" என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது சக-ஊழியர்களிடம் நான்கு விதமான வைரஸ்கள் வழங்கப்பட்டது என்றும், அவற்றுள் எந்த வைரஸ் நன்றாக பரவும் என்பதை கண்டறிய கேட்டு கொண்டனர் என்றும் சாவோ-ஷாவோ என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
மிக அதிகமாக பரவிய இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 6,894,809-பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்பும் பலமுறை சீனா மீது இந்த குற்றசாட்டு வைக்கப்பட்டிருந்தாலும், வுஹானில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சியாளர் இப்படி கூறுவது இதுவே முதல்முறையாகும்.
பிசிஜிக்ஸ்
"உயிரியல் ஆயுதம்": கொரோனவை திட்டமிட்டு பரப்பியதா சீனா?
சர்வதேச செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரான ஜெனிஃபர் ஜெங்குடனான ஒரு பிரத்யேக நேர்காணலில் வுஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸை "உயிரியல் ஆயுதம்" என்று கூறிய சாவோ ஷாவோ, தனது மேலதிகாரி தங்களிடம் நான்கு விதமான வைரஸைக் கொடுத்ததாகவும், அவற்றுள் எது எளிதாக உயிரினங்களுக்கு பரவும் என்பதை கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "2019 வுஹானில் நடந்த இராணுவ உலக விளையாட்டுப் போட்டியின் போது, எனது சக-ஊழியர்களில் ஒருவர், உடல்நலம் மற்றும் சுகாதார நிலைமைகளை சரிபார்க்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டார். சுகாதாரத்தை சரிபார்க்க வைராலஜிஸ்டுகள் தேவையில்லை என்பதால், அவர் வைரஸை பரப்புவதற்காகவே அங்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்" என்றும் சாவோ-ஷாவோ தெரிவித்துள்ளார்.