Page Loader
"இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி, பல்வேறு தலைவர்கள் பங்குபெற்ற அரச விருந்தில் கலந்துகொண்டார்.

"இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2023
10:50 am

செய்தி முன்னோட்டம்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றிய ஒரே இந்திய தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற தலைவர்களுக்கு அடுத்தபடியாக, தற்போது பிரதமர் மோடிக்கும் அந்த பெருமை கிடைத்திருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் "இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்" என்று கூறிய பிரதமர் மோடி, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகள் குறித்து பேசினார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், விரைவான டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை இந்தியாவை முதலீட்டாளர்களின் கனவு இடமாக மாற்றியுள்ளது என்றும் கூறினார்.

ஸ்ஞ்சாசத்ன்

 இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது அவசியம்: அதிபர் பைடன்

இன்று அதிகாலை, வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் பிரதமர் மோடிக்கு 19 துப்பாக்கி குண்டு வணக்கங்கள் மற்றும் தேசிய கீதங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற அமெரிக்க அதிபர் பைடன், "உலகம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்படுவது அவசியம்" என்றார். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, "இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை. இரு நாடுகளின் அரசியலமைப்புகளும் 'மக்கள்' என்ற வார்த்தைகளுடன் தொடங்குகின்றன. நமது இரு நாடுகளும் பன்முகத்தன்மையில் பெருமிதம் கொள்கின்றன... உலக நன்மைக்காக, உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக, நாங்கள் ஒன்றாகச் செயல்பட உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தி உரையாற்றியதற்கு பிறகு பிரதமர் மோடி, பல்வேறு தலைவர்கள் பங்குபெற்ற அரச விருந்தில் கலந்துகொண்டார்.