NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து

    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 10, 2023
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனாவின் தென்கிழக்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளியில் திங்கட்கிழமை (ஜூலை 10) நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த குற்றத்தில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை சீன காவல்துறை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான முழுமையான காரணங்கள் வெளியிடப்படவில்லை .

    எனினும், வேண்டுமென்றே இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக மட்டும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்தத் தாக்குதல் சம்பவம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. "கத்திக்குத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு ஆசிரியர், இரண்டு பெற்றோர் மற்றும் மூன்று மாணவர்கள் உள்ளனர். மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்." என்று குவாங்டாங் நகர அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    stabbing increases in china schools

    சீனாவில் அடிக்கடி பள்ளிகளில் நிகழும் தாக்குதல்கள்

    முன்னதாக, ஏப்ரல் 2022 இல் இதேபோன்ற மற்றொரு தாக்குதலில், தெற்கு சீனாவில் உள்ள மழலையர் பள்ளிக்குள் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

    மேலும் 16 பேர் காயமடைந்தனர். கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகள் மற்றும் இறுக்கமான பாதுகாப்பு காரணமாக சீனாவில் வன்முறை குற்றங்கள் அரிதானவையாகவே இருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பள்ளிகள் உட்பட பல இடங்களில் கத்தி மற்றும் கோடாரி தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இதுபோன்ற தாக்குதல்களில் சுமார் 100 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

    சமூகத்தில் அதிகரித்துவரும் சமத்துவமின்மை காரணமாக, கோபத்தை காட்டும் முயற்சியில் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக சீன மனநல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    கொலை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சீனா

    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா
    புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஷாவ்மி.. என்னென்ன வசதிகள்?  சியோமி
    நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன?  உலகம்
    ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன? கிரிக்கெட்

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025