
டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த சிதிலங்கள், இறந்தவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த 1912ஆம் ஆண்டு கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகள், அமெரிக்காவின் வட அட்லாண்டிக் கடலுக்கடியில் உள்ளது.
அதை காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது, சென்ற வாரத்தில், கடலுக்கு அடியில் நசுங்கியது. அதில் பயணப்பட்ட 5 பேரும் அந்த நீர்மூழ்கியிலேயே இறந்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நீர்மூழ்கி கப்பல், உள்நோக்கி வெடித்தல்(Implode) காரணமாக நசுங்கி இருக்கக்கூடும் எனவும், கடலுக்கு அடியில் இருக்கும் அதிக அழுத்தத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
அந்த நீர்மூழ்கி கப்பலின் சிக்னல் துண்டிக்கப்பட்டதும், அதில் பயணப்பட்டவர்களை காப்பாற்ற அமெரிக்கா கடற்படை துரிதமாக செயலில் இறங்கியது.
தொடர்ந்து 4 நாட்கள் தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வந்தது.
card 2
சிதிலங்கள் மீட்கப்பட்டன
தேடுதலுக்கு, அமெரிக்காவிற்கு உதவ கனடா கடற்படையும் உடன்வந்தது. 96 மணி நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களை அமெரிக்க மற்றும் கனட கடற்படையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து, அந்த நீர்மூழ்கி கப்பலில் பயணித்தவர்கள் அதற்கு மேலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதில், இறந்தவர்களின் உடல்களும் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்ய, இந்த சிதிலங்கள் அனுப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.