Page Loader
இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 
இந்திய தூதரகத்தை பலமுறை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் 

எழுதியவர் Sindhuja SM
Jul 09, 2023
02:00 pm

செய்தி முன்னோட்டம்

சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி சில குழுக்கள் போராடி வருகின்றன. இந்த குழுக்கள் பொதுவாக காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இயங்கி வந்த பல காலிஸ்தான் குழுக்கள் கட்டப்படுத்தப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியா, கனடா,பிரிட்டன் போன்ற நாடுகளில் இப்போது வரை இந்த குழுக்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இதுபோன்ற நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை பலமுறை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். சில மாதங்களுக்கு முன், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ஏற்றபட்டடிருந்த இந்திய தேசிய கொடி கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டு அவமதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று கனடாவில் நடந்த ஒரு இந்திய எதிர்ப்பு பேரணியில் இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் அவமதித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

ட்விட்டர் அஞ்சல்

இந்திய தேசிய கொடி அவமதிக்கப்படும் வீடியோ