
கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது
செய்தி முன்னோட்டம்
கனடாவின் டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே நேற்று(ஜூலை 8) நடைபெற்ற இந்திய எதிர்ப்பு பேரணியில் வன்முறை வெடித்ததால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்ஜித் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.
இவருக்காக ஜூலை 8 ஆம் தேதி கனடாவில் ஒரு பேரணியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று இந்த பேரணிக்காக டொராண்டோவில் இந்திய துணைத் தூதரகம் இருக்கும் தெருவில் சுமார் 250 காலிஸ்தான் ஆதரவாளர்கள் திரண்டனர்.
ஜேக்க்
இந்திய ஆதரவு குழுவை தாக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்கள்
இந்த பேரணிக்காக வெளியிடப்பட்டிருந்த போஸ்டர்களில், ஒட்டாவாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொராண்டோவில் உள்ள இந்திய தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீக்கியர்களுக்கு நீதி(SFJ) என்ற பிரிவினைவாதக் குழுவின் ஆதரவோடு இந்த பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணிக்கு எதிராக இந்திய ஆதரவாளர்களும் அப்பகுதியில் கூடி இருந்தனர்.
இந்த இருதரப்பு போராட்டக்காரர்களையும் தடுப்பதற்காக அந்த தெருவில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், காலிஸ்தான் ஆதரவு குழு அந்த தடுப்புகளை மீறி இந்திய ஆதரவு குழுவை தாக்க முயன்றது.
இதனையடுத்து, அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் 250 போராட்டக்காரர்களை கனட நாட்டு போலீஸார் கைது செய்தனர்.