உலகளவில், அதிக சைவ பிரியர்கள் இருக்கும் நாடாக இந்தியா முன்னிலை; கடைசி இடத்தில் ரஷ்யா
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா டாப் லிஸ்டில் இருக்கும் வேளையில், வேறு ஒரு விஷயத்திலும், தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது. உணவு விஷயத்தில் தான் அது! உலகளவில் பல்வேறு தகுதிகளில் புள்ளி விவரங்களை சேகரித்து வெளியிடும் ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில், சைவ பிரியர்கள் அதிகள் வாழும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்த அறிக்கைப்படி, 38% நபர்கள் இந்தியாவில் சைவர்களாக வாழ்கின்றனர். இந்து, பௌத்தம், சமணம் என பல மதங்கள் இங்கே பரவலாக உள்ளதால், இந்த விகிதாச்சாரம் என்கிறார்கள். மேலும், கேரளா, மேற்கு வங்காளம் போன்ற கடலோர மாநிலங்களை தவிர, மற்ற மாநிலங்களில் இறைச்சி உண்பதும் மிக மிக குறைவு என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த இடங்களை கைப்பற்றிய இஸ்ரேல், தைவான் மற்றும் இத்தாலி
இந்தியாவிற்கு அடுத்த இடத்தில், மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாக உள்ளனர். தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும், ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும் சைவபிரியர்களாக உள்ளனர். இந்நாடுகளில் மதங்களால் இந்த தேர்வை எடுப்பவர்கள் குறைவாக உள்ளனர். தங்கள் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டே, இவர்கள் சைவ பிரியர்களாக உள்ளனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு சிலரோ, மிருகங்களை வதைப்பதை தவிர்க்கவே வெஜிடேரியன் வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். அது மட்டுமின்றி, சைவ உணவு திருவிழாக்களும் இங்கே நடத்தப்பட்டு வருவது கூடுதல் சுவாரசியம். இந்த வரிசையில், குறைவான சைவ பிரியர்கள் வாழும் நாடாக ரஷ்யா கண்டறியப்பட்டுள்ளது. அங்கே 1 சதவிகித மக்களே சைவம் உண்ணுகிறார்கள்.