Page Loader
இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்
ஆபாச பட சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்

இந்த கைல பணம், அந்த கைல ஆபாச படம்: சர்ச்சையில் சிக்கியுள்ள பிபிசி நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2023
11:24 am

செய்தி முன்னோட்டம்

உலகளவில் பிரபலமான ஊடகமாக செயல்பட்டு வரும் BBC நிறுவனம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக செயல்பட்டு வரும் பிபிசி நிறுவனம், ஒரு நபருக்கு, அவரின் 17 வயதில் இருந்து, கடந்த 3 ஆண்டுகளாக, ரூ.37.19 லட்சம் வரை பணம் கொடுத்து, அதற்கு பதிலாக, அவரிடம் இருந்து ஆபாச படங்களை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்து கலாசார மந்திரி லூசி பிரேசர் கூறும்போது, "ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்த கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பி.பி.சி. இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளேன். இதுபற்றி விரைவாகவும் மற்றும் உணர்வுப்பூர்வ முறையில் விசாரணை நடத்தப்படும் என தனக்கு உறுதியளித்து உள்ளார்" என கூறியுள்ளார்.

card 2

சர்ச்சையில் சிக்கிய நபரை சஸ்பெண்ட் செய்த பிபிசி 

சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த மர்ம நபரின் தாயார் ஊடகத்திடம் கூறும்போது, "பி.பி.சி. நிறுவனத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர், தான் பிபிசியின் பணியாளர் எனக்கூறி, தனது பிள்ளைக்கு, ரூ.37 லட்சத்திற்கு கூடுதலாக 3 ஆண்டுகளாக கொடுத்து வந்து உள்ளார்" என கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் பற்றி தெரிந்தவுடன், அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் பி.பி.சி.யிடம் புகார் அளித்து உள்ளனர். இதனை பி.பி.சி. நிறுவனமும் நேற்று (ஜூலை 9) உறுதி செய்து உள்ளது. இதனை தொடர்ந்து ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என அறிக்கையும் வெளியிட்டுள்ளது. எனினும், சஸ்பெண்ட் செய்யப்பட்டது, குற்றம் சாட்டப்பட்ட மேலதிகாரியா அல்லது அந்த டீன் ஏஜ் நபரா எனத்தெரியவில்லை