உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
பப்புவா நியூ கினியாவில் தலைவர்களுக்கு 'சிறுதானிய' விருந்தளித்தார் பிரதமர் மோடி
இன்று(மே 22) பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் மூன்றாவது இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு(FIPIC) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்தளித்தார்.
சவதி அரேபிய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!
விண்வெளிச் சுற்றுலாவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.
பப்புவா நியூ கினியாவில் 'திருக்குறள்' மொழிபெயர்ப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி
பப்புவா நியூ கினியா நாட்டு மக்களிடம் இந்திய சிந்தனை மற்றும் கலாச்சாரத்தை கொண்டு செல்வதற்காக, டோக் பிசின் மொழியில் 'திருக்குறளை' பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
உக்ரைனுக்கு $375 மில்லியன் மதிப்பிலான புதிய இராணுவ உதவியை வழங்க இருக்கிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு
போரின் மையப்பகுதியில் உள்ள கிழக்கு உக்ரேனிய நகரமான பாக்முத்தை நேற்று(மே 20) கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது.
தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவியான கேரி(35)தான் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.
பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவில் நுழையத் தடை!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, ரஷ்யாவின் தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது அமெரிக்கா. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 500 அமெரிக்கர்களை தங்கள் நுழைய தடைவிதித்து அறிவித்திருக்கிறது ரஷ்யா.
இந்தியாவில் உள்ளவர்கள் கிரீன் கார்டைப் பெறுவதற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது !
அமெரிக்காவில் வசிக்க விரும்பும் சிலர் கிரீன் கார்டு பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
மியான்மரில் மோக்கா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது!
மியான்மரில் மோக்கா புயலால் 145 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முதல் இங்கிலாந்து நாடுகள் வரை தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலி!
சீனாவுக்குச் சொந்தமான குறும்பட வீடியோ செயலியான TikTokஐ தடை செய்த முதல் நாடாக அமெரிக்காவின் மொன்டானா மாறியுள்ளது.
அமெரிக்கா செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் விசா பற்றிய அறிவிப்பு!
அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான விசா பற்றிய தகவலை அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி வெளியிட்டுள்ளார்.
திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில், திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகள் மீதான தடையை அமல்படுத்தும் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது.
சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 1% செல்வந்தர்களில் ஒருவராக சேர உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை!
இந்தியாவில் யாரெல்லாம் கோடீஸ்வரர்கள் என்று கேட்டால், ஒரு சிலரின் பெயரை உடனே சொல்லிவிட முடியும்.
அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா
பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.
அமெரிக்கா கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
அமெரிக்கா கடன் உச்சவரம்பை அடையவிருக்கிறது. அதனை உயர்த்த வேண்டும் என அமெரிக்கவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரும் கூறி வருகிறார்கள். கடன் உச்சவரம்பு என்றால் என்ன? அதனை உயர்த்தாவிட்டால் என்ன ஆகும்?
இந்திய பெருங்கக்கடலில் மூழ்கிய சீனப் படகு: 39 பேரைக் காணவில்லை
இந்திய பெருங்கடலில் இயங்கிக்கொண்டிருந்த சீன மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதை அடுத்து, அதில் இருந்த 39 பணியாளர்களை காணவில்லை என்று சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
கேன்ஸ் 2023: உலகத் திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படங்கள்
உலகின் பிரபலமான திரைப்பட விழாவான கேன்ஸ் விழா 2023 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் இந்தியத் திரைப்படங்கள் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.ஈஷா குப்தா மற்றும் அனுஷ்கா சர்மா உட்பட பல இந்திய பிரபலங்களும் கேன்ஸ் திரைப்பட விழாவின் 73 வது சீசனில் அறிமுகமாக உள்ளனர்.
11,000 பேரை பணி நீக்கம் செய்யும் வோடபோன் நிறுவனம்.. ஏன்?
உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்திலிருந்து 11,000 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது வோடஃபோன். அந்நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக மார்கரிட்டா டெல்லா வல்லே பதவியேற்ற சில மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஒரே பாலின தம்பதிகளுக்கு தத்தெடுக்கும் உரிமையை வழங்கியது தைவான்
ஒரே பாலின தம்பதிகள் இணைந்து குழந்தைகளை தத்தெடுக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை தைவான் பாராளுமன்றம் இன்று(மே 16) நிறைவேற்றியது.
அமெரிக்கா: சதை உண்ணும் போதைப்பொருளால் ஜாம்பியாக மாறும் மக்கள்
அமெரிக்க அதிகாரிகள், "ஜாம்பி மருந்து"என்ற போதைப்பொருள் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
தேசிய டெங்கு தினம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும்.
அமெரிக்காவின் அதிகம் விரும்பப்படும் அரச குடும்ப உறுப்பினர் யார்? 5வது இடத்தில் மன்னர் சார்லஸ்
அமெரிக்காவில் உள்ள பலரிடம் இங்கிலாந்து அரச குடும்பத்தில் தங்களுக்கு பிடித்த உறுப்பினர் யார் என்று கேட்கப்பட்டது.
இம்ரான் கான் பிரச்சனை: தலைமை நீதிபதிக்கு எதிரான குழுவை அறிமுகப்படுத்துகிறது பாகிஸ்தான் அரசு
பாகிஸ்தானின் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியாலுக்கு எதிராக ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் நேற்று(மே 15) நிறைவேற்றி உள்ளது.
இரண்டாவது மாதமாக தொடரும் சூடான் உள்நாட்டு போர்
சூடானில் உள்நாட்டு போர் ஆரம்பித்து ஒரு மாதமாகியும், இன்னும் அது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.
ஊழல் வழக்கில் இம்ரான் கானின் மனைவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவிக்கு மே 23ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி லாகூரில் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும் மலேசியா
சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் குற்றமற்றதாக மாற்றுவதற்கான சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு
தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம்
தோஷகானா வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம்(IHC) இன்று(மே 12) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார்.
"நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்
வடக்கு இத்தாலியின் மிலன் நகரில் திடீரென்று ஒரு வேன் வெடித்ததால் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை
ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக மாற்றும் சட்டமூலத்திற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன
இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், கங்காருக்கள் பேரழிவை சந்திக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இன்று(மே 9) இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார்.