Page Loader

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

25 Apr 2023
பிரிட்டன்

டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்! 

கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது பிரிட்டன்.

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன? 

கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை 31 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 Apr 2023
ஜப்பான்

போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான்

போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து குழந்தைகள் உட்பட 45 பேரை ஜப்பான் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 Apr 2023
கனடா

அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் 

கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே, நாட்டில் அதிகரித்து வரும் இந்துபோபியா(இந்து மத வெறுப்பு) நிகழ்வுகளை கண்டித்துள்ளார்.

24 Apr 2023
இந்தியா

ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா

வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும்.

24 Apr 2023
உலகம்

சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா 

சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.

21 Apr 2023
உலகம்

இங்கிலாந்து இளரவசர் வில்லியம், உணவகத்தில் செய்த வேலை! வைரலாகும் வீடியோ 

இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 20) இங்கிலாந்து அருகே உள்ள பர்மிங்க்ஹம் நகருக்கு, அரச வருகையாக சென்றிருந்தனர்.

இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார் 

இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.

21 Apr 2023
இந்தியா

இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருவார் என்ற தகவல் நேற்று(ஏப் 20) வெளியாகியது.

21 Apr 2023
ரஷ்யா

தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா

உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த நகரமான பெல்கோரோட் மீது ரஷ்ய போர் விமானம் ஒன்று "தற்செயலாக" வெடிகுண்டை வீசியது.

21 Apr 2023
உலகம்

தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!

IMBIE (Ice Sheet Mass Balance Intercomparison Exercise) என்பது பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டம்.

20 Apr 2023
லண்டன்

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.

20 Apr 2023
சீனா

நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன? 

3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் உதவியுடன் நிலாவில் நிரந்தரக் கட்டுமானம் அமைக்க முடியுமா என சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது சீனா.

20 Apr 2023
இந்தியா

இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ 

கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அடுத்த மாதம் இந்தியா வருகிறார் என்று NDTV செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

20 Apr 2023
இந்தியா

இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா 

இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

19 Apr 2023
அமெரிக்கா

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் - அதிர்ச்சி தகவல்

உலகில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சி செய்து வருகின்றனர்.

19 Apr 2023
அமெரிக்கா

பெனட்ரில் சேலஞ்சு: அமெரிக்க சிறுவனின் உயிரை பறித்த வைரல் டிக்டாக் சேலஞ்சு

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், வைரலான டிக்டாக் சேலஞ்சை முயற்சித்ததால், ​​உயிரிழந்துள்ளார்.

19 Apr 2023
சீனா

சூப்பர்சோனிக் 'உளவு' ட்ரோன்களை அனுப்ப இருக்கும் சீனா: அமெரிக்க உளவுத்துறை 

அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை!

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் நியூயார்க் நகரம் இடம்பிடித்துள்ளது.

19 Apr 2023
உலகம்

பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது? 

பிரிட்டன் அரசு முன்மொழிந்துள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டத்திற்க எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றன குறுஞ்செய்தி சேவைத் தளங்களான வாட்ஸ்அப், சிக்னல் உள்ளிட்ட தளங்கள்.

18 Apr 2023
அமெரிக்கா

உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா? 

2016-ல் உலக பொருளாதார மன்றம் (WEF) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும், 2030-ம் தற்போது இருக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை இருக்காது. உலக அதிகாரம் பல நாடுகளின் கைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், எனக் குறிப்பிட்டிருந்தது.

சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சீனர்கள் நடத்தும் வணிகங்களை கராச்சி காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிக்கேய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

18 Apr 2023
அமெரிக்கா

கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம்

அமெரிக்காவின் மிசோரியில் உள்ள வீட்டு உரிமையாளரான ஆண்ட்ரூ லெஸ்டர்(85), கறுப்பின சிறுவனான ரால்ப் யார்ல்லை(16) வியாழன் அன்று துப்பாக்கியால் சுட்டார்.

17 Apr 2023
பிரான்ஸ்

இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி

பிரான்சும் இந்தியாவும் இணைந்து இன்று(ஏப் 17) பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப் படையின்(FASF) விமானப்படை தளமான மாண்ட்-டி-மார்சனில் 'ஓரியன்' என்ற இராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளன.

17 Apr 2023
உலகம்

வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்

ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.

16 Apr 2023
உலகம்

மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம் 

டேனிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு புதிய வகை பறவைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

15 Apr 2023
உலகம்

டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்

டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான்.

14 Apr 2023
அமெரிக்கா

அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள 'சவுத்ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்ஸ்' என்ற ஒரு குடும்ப பால் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தால் 18,000க்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்தன.

13 Apr 2023
அமெரிக்கா

நியூயார்க்: எலிகளை விரட்டுவதற்கு 1 கோடி ரூபாய் சம்பளம் 

நியூயார்க் நகரத்தில்(NYC) அதிகரித்து வரும் எலிகளின் எண்ணிக்கையை சமாளிக்க, ஒரு அதிகாரியை நிர்வாகம் நியமித்துள்ளது.

13 Apr 2023
சீனா

சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 

புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

12 Apr 2023
இந்தியா

இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட் 

சிங்கப்பூரில் உள்ள ஒரு முன்னணி சூப்பர் மார்க்கெட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லீம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

12 Apr 2023
இந்தியா

உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர் 

கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று உக்ரைன் இந்தியாவிடம் கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் இன்று(ஏப் 12) தெரிவித்துள்ளது.

12 Apr 2023
இந்தியா

'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம் 

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா தற்போது அதிக வளர்ச்சி விகிதத்துடன் பிரகாசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு 

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் அல்லது பசுமையான இடங்களைக் கொண்ட உணவகங்களுக்குள் குடும்பங்கள் மற்றும் பெண்கள் நுழைவதை தலிபான் தடை செய்துள்ளாதாக செய்திகள் கூறுகின்றன.

10 Apr 2023
சீனா

ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது 

தைவானைச் சுற்றி சீனா நடத்திய மூன்று நாள் போர் ஒத்திகை "வெற்றிகரமாக முடித்தது" என்று சீனா தெரிவித்துள்ளது.

10 Apr 2023
இந்தியா

அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு

உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு பயணம் செய்வதை சீனா கடுமையாக எதிர்த்துள்ளது.

09 Apr 2023
பூட்டான்

பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள்

பூட்டான் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பல வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒரு நாடாகும்.

இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலால் அதிகளவிலான பனிப்பாறைகளை இமயமலை இழந்துள்ளதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

08 Apr 2023
ஈரான்

ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிவதற்கு பொது இடங்களில் கேமராக்களைப் பொருத்திய ஈரான் அரசு

பெண்கள் அணியும் ஆடையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஈரான் அதிகாரிகள் பொது இடங்களிலும் சாலைகளிலும் கேமராக்களை நிறுவி, ஹிஜாப் அணியாத பெண்களுக்கு அபராதம் விதிக்க உள்ளதாக ஈரானிய காவல்துறை அறிவித்துள்ளது.