Page Loader
3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை!
உலகின் பணக்கார நகர பட்டியலில் நியூயார்க் மற்றும் அமெரிக்கா இடம்பிடித்துள்ளது

3 லட்சம் கோடீஸ்வரர்களை கொண்ட உலகின் பணக்கார நகரம் இது தான் - அறிக்கை!

எழுதியவர் Siranjeevi
Apr 19, 2023
10:44 am

செய்தி முன்னோட்டம்

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியலில் அமெரிக்கா மற்றும் நியூயார்க் நகரம் இடம்பிடித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் உலகின் கோடீஸ்வரர்களை கொண்ட நகரத்தின் பட்டியலை ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் அறிக்கை வெளியிட்டது. அதன்படி, நியூயார்க் நகரத்தில் 3,40,000 மில்லியனர்கள், 724 சென்டி மில்லியனர்கள் மற்றும் 58 பில்லியனர்கள் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, 290,300 பணக்காரர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிகள் 285,000 கோடீஷ்வரர்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. தொடர்ந்து, அடுத்தடுத்து இடங்களான ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, சிஐஎஸ், கிழக்கு ஆசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, வட அமெரிக்கா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய ஒன்பது பிராந்தியங்களில் உள்ள 97 நகரங்களை உள்ளடக்கியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post