NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 25, 2023
    11:22 am
    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி
    வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்புகளால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருக்கும் கபால் நகரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தில் இந்த குண்டு வெடிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. 2009க்கு முன், இந்த அலுவலகம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார ஷார்ட் சர்க்யூட் காரணமாக அலுவலகத்தில் இருந்த வெடிமருந்துகள் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை.

    2/2

    வெடி விபத்துகள் ஏற்பட்டதால் இடிந்து விழுந்த காவல்துறை கட்டிடம் 

    இந்த குண்டு வெடிப்பு குறித்து வெவ்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் இதனால் பலியாகி உள்ளனர். "நிறைய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு கிடங்கு எங்களிடம் இருந்தது. கவனக்குறைவால் அங்கு குண்டு வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிறோம்." என தீவிரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய தலைவர் சோஹைல் காலிட் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்குள் வெடி விபத்துகள் ஏற்பட்டதால் கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    பாகிஸ்தான்

    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    இந்தியா வருகிறார் பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ  இந்தியா
    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் சீனா
    2026க்குள் 77 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை பாகிஸ்தான் அடைக்க வேண்டும் உலகம்

    உலகம்

    போர்க்களமாக மாறி இருக்கும் சூடானில் இருந்து மக்களை வெளியேற்றிய ஜப்பான் ஜப்பான்
    உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள் பருவநிலை
    இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் மலேரியா
    சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் காவேரி' தொடங்கப்பட்டது  இந்தியா

    உலக செய்திகள்

    320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன?  கூகுள்
    அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்  கனடா
    ஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா இந்தியா
    சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா  உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023