உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியலிடம் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நீதிமன்ற விசாரணையில் மெய்நிகராக வீடியோ மூலம் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை
காலநிலை மாற்றத்தின் மோசமான எதிர்கால தீங்குகளைத் தடுக்க மனிதகுலத்திற்கு இன்னும் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்று திங்களன்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கும் வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.
குறைந்த விலைக்கு விற்கப்பட்ட கிரெடிட் சூயிஸ் நிறுவனம்: என்ன சொல்கிறார் உதய் கோடக்
கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸ், மார்ச் 17ஆம் தேதி அன்று 60% குறைவான விலைக்கு UBSஸிற்கு விற்கப்பட்டது.
மலை காடுகள் மிக வேகமாக அழிந்து வருகிறது: ஆய்வில் தகவல்
உலகின் 85 சதவீத பறவைகள், பாலூட்டிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு வாழ்விடங்களாக இருக்கும் மலை காடுகள் -மரம் வெட்டுதல், காட்டுத் தீ மற்றும் விவசாயம் ஆகியவற்றால் மிக வேகமாக அழிந்து வருவதாக ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது,
உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை
உலக நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் பிரதமர் பதவியினை கடந்த 2017ம் ஆண்டு ஏற்றுக்கொண்டவர் ஜெசிந்தா ஆர்டர்ன்(42).
இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்திற்கு இன்று(மார் 18) சென்று கொண்டிருந்த போது, லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் போலீஸார் நுழைந்ததாக அவரது அரசியல் கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா
நித்யானந்தாவின் கைலாசா, 30 அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஹவாயில் இருக்கும் சொகுசு வீட்டுக்கு தப்பி சென்ற சிலிக்கான் வங்கி CEO
தொழில்நுட்பத் துறையில் பெயர்பெற்று, மூன்று தசாப்தங்களாக இயங்கி வந்த சிலிக்கான் வங்கி, மார்ச் 10, 2023 அன்று திவாலானது. இதில் முதலீடு செய்திருந்தவர்கள் பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்வார் என்று பெய்ஜிங்கின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ரஷ்ய-உக்ரைன் போரை பொருட்படுத்தாமல் உக்ரைனுக்கு திரும்பியுள்ள இந்திய மாணவர்கள்
ரஷ்ய- உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் போது, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
அடையாளம் தெரியாத புதிய வகை கொரோனாவை கண்டறிந்திருப்பதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
வீடியோ: அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
ரஷ்ய ஜெட் விமானம், அமெரிக்க ஆளில்லா விமானத்தை மோதும் வீடியோ அமெரிக்க அதிகாரிகளால் வெளியிட்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர்: யாரிந்த எரிக் கார்செட்டி
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை தேர்ந்தெடுக்க அமெரிக்க செனட் நேற்று(மார் 15) வாக்கெடுப்பை நடத்தியது. இதில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 52-42 என்ற விகிதத்தில் வாக்களித்துள்ளனர்.
தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலைப் படை இருக்கிறது என்றும் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் 120% பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சிலிக்கான் வங்கி திவால்: வரலாறு காணாத சரிவை சந்திக்கும் சுவிஸ் வங்கி
அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலை தொடர்ந்து சுவிஸ் கடன் வழங்கும் நிறுவனமான கிரெடிட் சூயிஸின் பங்குகளும் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள்
கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் திருமணம் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை ஒரு அரச எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார்.
எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா
இந்தியாவுக்கான அடுத்த தூதராக எரிக் கார்செட்டியை நியமிக்க அமெரிக்க செனட் இன்று(மார் 15) வாக்களிக்கவுள்ளது.
ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் - சுவீடன் ஆய்வில் தகவல்
உலக அளவில் அதிகமாக ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியல் குறித்து சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்னும் ஆய்வு நிறுவனம் அண்மையில் விவரங்களை வெளியிட்டுள்ளது.
மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான்
தோஷகானா வழக்கில் கைது செய்யப்பட இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மார்ச் 18ஆம் தேதி ஆஜராக உள்ளார்.
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம்
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய போர் விமானம் மோதியதால், ஆளில்லா அமெரிக்க விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் கைது செய்யப்படுவதை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கிய ஆதரவாளர்கள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசாரை அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர்.
இந்திய ஆன்லைன் படிப்பில் கலந்து கொள்ள இருக்கும் தாலிபான் உறுப்பினர்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(மார் 14) தொடங்கும் "இந்தியா இம்மெர்ஸன்" ஆன்லைன் பாடத்திட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக்
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது என்றும் இதை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
சோஹோ ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி குற்றச்சாட்டு
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களுள் ஒன்றான சோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி சில குற்றச்சாட்டுகளைக்கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்யாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது, பிப்ரவரி 2022 முதல் நடந்து வரும் உக்ரைனுடனான ரஷ்ய போரை பற்றி அவர் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
ஈரானில் நடந்த சமீபத்திய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.
மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள்
எலக்ட்ரானிக் ஸ்கிராப்பில் இருந்து ஒரு பயோ-ரோபோடிக் கையை உருவாக்கி இரு கென்ய கண்டுபிடிப்பாளர்கள் அசத்தியுள்ளனர்.
இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி
டெல்லியில் இருந்து தோஹா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நடுவானில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று(மார் 13) திருப்பி விடப்பட்டது.
சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ
சீனாவின் பெய்ஜிங்கில் புழு மழை பெய்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம்
அமெரிக்காவின் நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் ஒரு அம்மா உணவகம் இயங்கி வருகிறதாம்.
மூன்றாவது முறை அதிபராக தேர்தெடுக்கப்பட்டார் சீனாவின் ஜி ஜின்பிங்
சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக இன்று(மார் 10) பதவியேற்றார்.
170 டிரில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருங்கடல்களில் மிதக்கின்றன
ஒரு புதிய ஆய்வு, 171 டிரில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் துண்டுகள் தற்போது உலகப் பெருங்கடல்களில் மிதக்கின்றன என்று மதிப்பிடுள்ளது.
நித்யானந்தாவின் கைலாசா: உலகில் வேறு என்னென்ன குறு நாடுகள் உள்ளன
நித்யானந்தா நிறுவிய நாடான கைலாசாவின் "பிரதிநிதிகள்" கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்து கைலாசா பற்றிய பேச்சு அதிகமாகி இருக்கிறது.
ஜெர்மனியில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலா அரங்கு
தமிழக கலாசாரம், வரலாறு, பாரம்பரியம், உணவு போன்ற சிறப்பம்சங்களை எடுத்துரைத்து ஜெர்மனியர்களை தமிழகத்திற்கு ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனியின் பெர்லினில் நடைபெறும் சர்வதேச சுற்றுலாப் பேரவையில் தமிழகத்தின் சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும்: அமெரிக்கா
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது என்றும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர்
உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் பெண்களின் அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டி இருக்கும் நிலையில், டாட்டூ போட்டுக்கொள்வது என்பது தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுக்கிறது என்கிறார்கள் டாட்டூ பிரியர்கள்.
பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா
தங்களது ஒரு சோதனை ஏவுகணை சுட்டு வீழ்த்தபட்டாலும் அது போர் பிரகடனமாக கருதப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சிகள் தான் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு காரணம் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.