மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான்
தோஷகானா வழக்கில் கைது செய்யப்பட இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மார்ச் 18ஆம் தேதி ஆஜராக உள்ளார். லாகூர் உயர் நீதிமன்ற பார் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், இம்ரான் கான் புதன்கிழமை அன்று நிச்சயம் நீதிமன்றத்தில் ஆஜராவேன் என்று உறுதியளித்தார். இம்ரான் கான் கைதாவதற்கு மனதளவில் தயாராக இருப்பதாவும் நேற்று(மார் 14) கூறினார். "வெளியில் ஒரு பெரிய படை இருப்பதால் நான் மனதளவில் தயாராக இருக்கிறேன். அவர்களிடம் போலீஸ் மட்டுமல்ல, ராணுவத்தினரும் உள்ளனர். பாகிஸ்தானின் மிகப்பெரிய பயங்கரவாதி உள்ளே பதுங்கியிருப்பது போல் தெரிகிறது" என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.
சுதந்திரத்திற்காக போராடுங்கள்: இம்ரான் கான்
"எனது கட்சியின் புகழைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். அதனால் தான் என்னை தேர்தல் போட்டியில் இருந்து நீக்க விரும்புகிறார்கள். கருத்துக்கணிப்புகளின்படி, வரவிருக்கும் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். எனவே தான், என்னை நீக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்." என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நேற்று இம்ரான் கான் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தனது ஆதரவாளர்களை வெளியே வந்து தங்களின் "சுதந்திரத்திற்காக" போராடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவரது இந்த கோரிக்கை, வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அழைப்பல்ல என்றும் அவர் கூறினார்.