NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
    உலகம்

    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு
    எழுதியவர் Sindhuja SM
    Mar 17, 2023, 10:13 am 1 நிமிட வாசிப்பு
    இஸ்ரேலில்  புதிய வகை கொரோனா  கண்டுபிடிப்பு
    இந்த கொரோனா வகை BA.1 (Omicron) மற்றும் BA.2 வகைகளின் கலவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    அடையாளம் தெரியாத புதிய வகை கொரோனாவை கண்டறிந்திருப்பதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த கொரோனா வகை BA.1 (Omicron) மற்றும் BA.2 வகைகளின் கலவையாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகளுக்கு RT-PCR சோதனை செய்த போது இந்த புதிய வகை கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் தசைவலி போன்ற அறிகுறிகள் இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது போன்ற புதிய வகைகள் உருவாகுவது இயல்பு தான் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வகையான வைரஸ்கள் அருகருகே இருக்கும் போது இந்த மாற்றம் நிகழ்கிறது. இரண்டு வைரஸ்களும் பெருகி மரபணுப் பொருட்களைப் பரிமாறி கொள்கிறது, அதனால் புதிய வகை வைரஸ் உருவாகிறது.

    அதிகரித்து வரும் BA.2 வகை நோய்த்தொற்றுகள்

    இஸ்ரேலில் ஓமிகிரான் பாதிப்புகள் குறைந்து வந்தாலும், BA.2 வகை நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலின் பிரதமர் நஃப்தலி பென்னட் அந்நாட்டின் சுகாதார அமைச்சர் நிட்சான் ஹொரோவிட்ஸை சந்தித்துள்ளார். அதன்பிறகு, நாட்டு மக்கள் கண்டிப்பாக 3 தடுப்பூசிகள் போட வேண்டும் என்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த வாரம் இஸ்ரேலில் 6,310 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 335 நோயாளிகள் மோசமான நிலையில் உள்ளனர். 151 பேர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    உலக செய்திகள்
    இஸ்ரேல்

    உலகம்

    புதுமைகளை முன்னெடுக்கும் உலகின் டாப் 50 நிறுவனங்கள்.. டாடா குழுமத்திற்கு 20வது இடம்! டாடா
    இரண்டாம் உலக போரின் வெடிக்காத குண்டு: போலந்தில் 2,500 பேர் வெளியேற்றம்  உலக செய்திகள்
    AI குறித்து விவாதிக்கவிருக்கும் G7 நாடுகள்.. சாட்ஜிபிடி மீது விசாரணை தொடுக்கும் கனடா! சாட்ஜிபிடி
    சீனாவின் புதிய கொரோனா அலை: வாரந்தோறும் 65 மில்லியன் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு சீனா

    உலக செய்திகள்

    32 வருடங்களாக திணறி கொண்டிருக்கும் பாகிஸ்தான்: மீண்டும் ராணுவ ஆட்சியில் சிக்கி கொள்ளுமா  பாகிஸ்தான்
    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு பிரேசில்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    ஹைதராபாத்தில்  புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஹைதராபாத்

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023