உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை
உலக நாடுகளில் ஒன்றான நியூசிலாந்தின் பிரதமர் பதவியினை கடந்த 2017ம் ஆண்டு ஏற்றுக்கொண்டவர் ஜெசிந்தா ஆர்டர்ன்(42). வரும் அக்டோபர் 14ம் தேதி நியூசிலாந்த் நாட்டில் பொதுதேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஜெசிந்தா ஆர்டர்ன் தனது பிரதமர் பதவியினை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கடந்த அவர் திடீரென அறிவித்த இந்த அறிக்கை அந்நாட்டின் அரசியல் களத்தினை கலங்கவைத்துள்ளது. உலகின் மிகஇளம் பெண் பிரதமர் மற்றும் சர்வேதச அடையாளமாக பார்க்கப்பட்ட ஜெசிந்தாவின் பதவி விலகலுக்கு அவரது செல்வாக்கு சரிவே காரணம் என கூறப்படுகிறது. பதவியேற்ற அடுத்தஆண்டே இவர் ஓர் பெண் குழந்தையினை பெற்றெடுத்தார். இதன்மூலம் பதவிக்காலத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட இரண்டாம் உலகத்தலைவர் என்னும் சிறப்பினையும் பெற்றுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டில் 2007ல் பதவியேற்றார்
உலகில் உள்ள 193 நாடுகளில் 125 நாடுகளில் இதுவரை பெண் தலைவர்கள் ஆட்சி பொறுப்பில் இருந்ததே இல்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி இந்தியாவில் 1966 ஜனவரி முதல் 1977 ஏப்ரல் வரை இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தார். பின்னர் மீண்டும் 1980முதல் 1984 தான் மரணமடையும்வரை அவர் பிரதமர் பதவியினை வகித்தார். இந்தியாவில் அதிக காலம் பதவியில் இருந்த பெண் பிரதமர், ஒரே தலைவர் இவர்தான். பின்னர் இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவராக பிரதீபா பாட்டில் 2007 ஜூலை முதல் 2012 ஜூலை வரை பதவிவகித்தார். அதன் பின் இரண்டாம் பெண் குடியரசு தலைவராக தற்போது திரவுபதி முர்மு நாட்டின் 15வது குடியரசு தலைவராக பதவி ஏற்றுள்ளார்.