
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக்
செய்தி முன்னோட்டம்
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது என்றும் இதை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உலகம் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் இங்கிலாந்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதன் காரணமாக ஆயுதப் படைகளுக்கான நிதியுதவியை, தான் அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பாதுகாப்புச் செலவு கிட்டத்தட்ட 5 பில்லியன் பவுண்டுகளாக உயருமாம்.
கலிபோர்னியாவில், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்குவதற்கான இங்கிலாந்து-அமெரிக்க ஒப்பந்தத்தின் விவரங்கள் பற்றி அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்களுடன் சுனக் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலகம்
SSN-ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீன ராணுவ சக்தியை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக 2021 இல் ஆக்கஸ் ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தை பற்றி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுனக், ஆக்கஸ் கூட்டாண்மை "உலகம் இதுவரை அறிந்திராத" "மிக மேம்பட்ட" நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை வழங்கும் என்றும், பிரிட்டிஷ் கப்பல் கட்டும் தளங்களில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறினார்.
புதிய SSN-ஆக்கஸ் நீர்மூழ்கிக் கப்பல்கள் இங்கிலாந்தால் பயன்படுத்தப்படும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2030களின் பிற்பகுதியில் ராயல் கடற்படைக்காக இந்த கப்பல்கள் செயல்படும்.
இந்த நீர்மூழ்கி கப்பல் பற்றி பேசி கொண்டிருந்த சுனக், உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.