அடுத்த செய்திக் கட்டுரை

வைரல் வீடியோ: அமெரிக்காவில் இருக்கும் அம்மா உணவகம்
எழுதியவர்
Sindhuja SM
Mar 11, 2023
04:45 pm
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நியூஜெர்சியில் அம்மாஸ் கிச்சன் என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களுடன் ஒரு அம்மா உணவகம் இயங்கி வருகிறதாம்.
இந்த உணவகத்தில் குறைந்த விலையில் அளவில்லா சாப்பாடு கிடைப்பதாக ஃபுட் ப்ளாகர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் தமிழக உணவை தேடி அலையும் நபர்களுக்கும் புதிய உணவை ருசிக்க விரும்புபவர்களுக்கும் இது ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதே கடை அமெரிக்காவின் வேறு சில இடங்களிலும் இருக்கிறதாம்.
இதை தினேஷ் குமார் என்பவர் நடத்தி வருகிறார்.
இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது கொண்ட அன்பாலும் மரியாதையாலும் இந்த உணவகத்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.