
'சிஸ்டர் சிட்டி' மோசடி: 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தா
செய்தி முன்னோட்டம்
நித்யானந்தாவின் கைலாசா, 30 அமெரிக்க நகரங்களுடன் கலாச்சார கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
தன்னை தானே நாடு என்று கூறிக்கொள்ளும் கைலாசாவுடன் சகோதரத்துவ ஒப்பந்தமிட்டிருப்பதாக அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரம் கூறி இருந்தது.
இந்த ஒப்பந்தம் ஜனவரி 12 அன்று கையெழுத்தானது. இதற்கான கையெழுத்திடும் விழா நெவார்க்கில் உள்ள சிட்டி ஹாலில் நடைபெற்றது.
கைலாசாவின் வலைத்தளத்தின்படி, 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்கள் அதனுடன் ஒரு கலாச்சார கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளது.
இதை அந்த நகரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
"ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அந்த நகரத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு சமம் அல்ல. மேலும், அவை கோரிக்கைக்கான பதில்கள் மட்டுமே. நாங்கள் கோரப்பட்ட தகவலை சரிபார்க்க மாட்டோம்." என்று வட கரோலினாவில் உள்ள ஜாக்சன்வெயில் கூறியுள்ளது.
அமெரிக்கா
மனித உரிமைகள் இல்லாத அரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியாது: நெவார்க்
மேயர்கள் மற்றும் நகர சபைகள் மட்டுமல்ல, "மத்திய அரசாங்கத்தை நடத்துபவர்களும்" இந்த போலி தேசத்தின் வலையில் வீழ்கின்றனர் என்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நித்யானந்தாவின் கூற்றுப்படி, காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்கள் கைலாசத்திற்கு "சிறப்பு காங்கிரஸ் அங்கீகாரம்" வழங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த காங்கிரஸ் பெண்மணி நார்மா டோரஸ் ஆவார்.
ஓஹாயோ குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ட்ராய் பால்டர்சன் என்பவரும் காங்கிரஸின் அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.
கைலாசாவின் இந்த ஏமாற்று வேலையை பற்றி தெரிந்துகொண்டதும், நெவார்க் நகரம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
மனித உரிமைகள் இல்லாத அரசுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முடியாது என்று இதற்கு நெவார்க் நகரம் பதிலளித்துள்ளது.