உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு
பல மாதங்களுக்கு பிறகு, உக்ரைனில் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
மார்ஷியல் ஆர்ட்ஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்றிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்!
ஃபேஸ்புக்கின் நிறுவனரான மார்க் ஸூக்கர்பெர்க் ஜியு-ஜிட்ஸூ மார்ஷியல் ஆர்ட்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதாக தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.
எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது
வரும் மாதங்களில் எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு(WMO) எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு
2023ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 11 இடங்கள் சரிந்து, 160வது இடத்தைப் பிடித்துள்ளது.
சிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது.
செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிசூடு: 8 பேர் பலி, 13 பேர் படுகாயம்
செர்பியாவில் 21 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.
பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை
பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரமாக 530 காரட் எடைகொண்ட இந்த வைரமானது 1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.
அருணாச்சலில் உள்ள பகுதிகளின் பெயரை சீனாவால் மாற்ற முடியாது: பழமையான மடாலயம் அதிருப்தி
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு தவாங் மடாலயம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது.
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு
ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் உள்ள பல நகரங்களில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!
உலக வங்கியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா.
புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு
அதிபர் விளாடிமிர் புதினைக் கொல்வதற்கு உக்ரைன் முயற்சித்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி
செர்பியாவின் பெல்கிரேடில் உள்ள பள்ளியில் 14 வயது சிறுவன் வகுப்பறைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பாதுகாவலர் கொல்லப்பட்டனர்.
பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது
லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் மைதானத்தில் துப்பாக்கி தோட்டாக்களை வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகத்திற்கிடமான ஒரு நபரை போலீஸார் நேற்று(மே 2) கைது செய்தனர்.
உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி
கிழக்கு உக்ரேனிய பகுதிகளில் ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலை உக்ரைன் முறியடித்ததால், டிசம்பரில் இருந்து ரஷ்யாவை சேர்ந்த 1,00,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20,000க்கும் அதிகமான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா மதிப்பிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய அமெரிக்காவை சேர்ந்த 69 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்!
பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அணியவிருக்கும் பாரம்பரியமிக்க தங்கலத்திலான ஆடைகள் தயார் செய்து வருகின்றனர்.
காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் காளி தேவியின் படத்தை ட்வீட் செய்ததற்கு , உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமின் ட்ஜபரோவா மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2022 ஆம் ஆண்டில், இந்தியா அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது, அதே நேரத்தில் சீனா குறைவான மாணவர்களையே அனுப்பியுள்ளது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்!
கடன் உச்சவரம்பை காங்கிரஸ் உயர்த்தாவிட்டால் விரைவில் அமெரிக்கா விரைவில் நிதிநெருக்கடிக்கு ஆளாகும் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜானட் யெல்லன்.
காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்க-இந்தியர் ஒருவர், ஜனவரி 2020இல், 13 வயதுடைய மூன்று சிறுவர்களைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
AI-யின் வளர்ச்சி.. சுருங்குகின்றனவா பெருநிறுவனங்கள்?
தற்போதைய நிலையில் டெக் நிறுவனங்கள் என அறியப்படும் கூகுள், அமேசான், பேஸ்புக் என எல்லாமே பெருநிறுவனங்கள் தான். ஒவ்வொரு நிறுவனத்திலும் 50,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிவார்கள்.
இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்(USIBC) தெரிவித்துள்ளது.
பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்
இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இன்று(ஏப் 28) ராஜினாமா செய்தார்.
பறவை காய்ச்சல் அதிகரிப்பு: 30,000 கோழிகளை கருணைக்கொலை செய்ய இருக்கும் டென்மார்க்
டென்மார்க்கில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30,000 கோழிகள் கருணைக்கொலை செய்யப்படும் என்று டேனிஷ் கால்நடை மற்றும் உணவு நிர்வாகம்(DVFA) தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு 'ஸ்நாக்ஸ்' வழங்குவதை நிறுத்திய கூகுள்!
கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது கூகுள். செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்தது.
மைக்ரோஃசாப்ட் - ஆக்டிவிஷன் பிலிசார்டு ஒப்பந்தத்தை தடை செய்தது பிரிட்டன்!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க வீடியோ கேம் நிறுவனமான ஆக்டிவிஷன் பிலிசார்டு நிறுவனத்தை 69 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்
இங்கிலாந்தில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிக்கின்றன என்று UK அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன்
வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்
'ஆபரேஷன் காவேரி'யின் கீழ், இந்தியா இதுவரை சூடானில் இருந்து கிட்டத்தட்ட 1100 பேரை வெளியேற்றியுள்ளது.
இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை
உஸ்பெகிஸ்தான் இருமல் மருந்து பிரச்சனையை அடுத்து, இந்தியாவில் தயாரித்த இன்னொரு இருமல் மருந்தும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்
ஒரு கிலோ கஞ்சாவை கடத்த முயற்சித்ததற்காக ஒரு கைதியை சிங்கப்பூர் இன்று(ஏப் 26) தூக்கிலிட்டது.
ஆபரேஷன் காவேரி: 3வது கட்டமாக, சூடானில் இருந்து 135 இந்தியர்கள் மீட்பு
போர்க்களமாக மாறியுள்ள சூடானில் இருந்து இன்று(ஏப் 26) புறப்பட்ட IAF C-130J விமானத்தில் 135 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது
இன்றும், நாளையும், நான்கு விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் செல்லும் என்றும், அவற்றில் இரண்டு மிகப் பெரியவை, கிட்டத்தட்ட ஒரு விமானத்தை ஒத்திருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு
சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களின் முதல் குழு, அந்நாட்டில் இருந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் வெளியேறியது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சூடானில் சிக்கி தவிக்கும் இலங்கை வாசிகள்: உதவி கரம் நீட்டிய இந்தியா
சூடானில் சிக்கித் தவிக்கும் சிங்கள மக்களை மீட்டு வர இந்தியா ஆதரவு கரம் நீட்டியதற்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது.
லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.