முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது. இதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன. 700 ஆண்டு பழமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தை தயார் செய்து வருகின்றனர். இந்த சிம்மாசனத்தில் தான் கையில் செங்கோல், தடி ஏந்தி அரியணை ஏறுவார். மேலும், மன்னர் சார்லஸ் அணிய வரலாற்று மிக்க சிறப்பு ஆடைகளையும் அணியவுள்ளார். புதிய மன்னராக பதவியேற்ற பின் சார்லஸ் அரசு முறை பயணமாக இந்தியா வர விரும்புவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபரான கரண் பிலிமோரியா தெரிவித்து உள்ளார். இந்தியாவுடனான நட்பை வலுப்படுத்த அவர் இந்திய பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.