இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு பெரும் வாய்ப்பாக இருக்கும் என்று அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில்(USIBC) தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இருதரப்பு வர்த்தக உறவுகளை முன்னேற்றுவது மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின்(USIBC) தலைவர் அதுல் கேஷாப் புதன்கிழமை(ஏப் 26) கூறியதாவது:
இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் வணிக உறவுகள், அமெரிக்காவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு நல்ல வேலைகளை உருவாக்கி தருகிறது.
இந்த ஆண்டு அமெரிக்க-இந்திய இருதரப்பு வர்த்தகம் 190 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது.
இதனால், தொழில்துறை இயந்திரங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் அமெரிக்க ஏற்றுமதிகள் அதிகரித்திருக்கிறது.
details
இந்தியாவின் பொருளாதார எழுச்சி பெரிதாக இருக்கும்: அதுல் கேஷாப்
இந்தியா தொடர்ந்து வளர்ச்சியடைவதால், அதன் பொருளாதாரம் அமெரிக்க வணிகங்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறும்.
இந்தியா உலகளாவிய நடுத்தர வர்க்கம் என்ற நிலையை அடைய தொடங்கி இருப்பதால், அமெரிக்க பொருட்கள் மற்றும் கலாச்சாரத்திற்கு இந்தியாவில் கிராக்கி இன்னும் அதிகமாகும்.
உலகளாவிய உற்பத்தி மையமாக மாறுவதற்கு இந்தியா முயற்சித்து வருவதால், சிறந்த அமெரிக்க தொழில்துறை உபகரணங்கள் மற்றும் ஐபிக்கான தேவை இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும்.
இந்தியாவின் பொருளாதார எழுச்சி, அமெரிக்க வணிகங்களை ஆதரிக்கும். மிக முக்கியமான ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் பொருளாதார எழுச்சி 21ஆம் நூற்றாண்டு நடக்க இருக்கும் மகிழ்ச்சியான மற்றும் சிறந்த கதைகளில் ஒன்றாக இருக்கும்.
2021ஆம் ஆண்டில் 70,000க்கும் மேற்பட்ட வேலைகளை(அமெரிக்கர்களுக்கு) இந்தியா உருவாக்கி இருக்கிறது.